இந்திரா பிரியதர்சினி சட்டக் கல்லூரி
இந்திரா பிரியதர்சினி சட்டக் கல்லூரி (Indira Priyadarshini Law College) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் பிரகாசம் மாவட்டத்தின் ஓங்கோல் நகரில் அஞ்சய்யா சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தனியார் சட்டப் பள்ளி ஆகும்.[1] பிரகதி வித்யா சமிதி என1984-85ஆம் தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனம், 1994-95ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் இச்சட்டப் பள்ளி 3 வருட இளங்கலைச் சட்டம் படிப்பினையும், 1997-98 முதல் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி. ஏ., எல். எல். பி . படிப்புகளை வழங்குகிறது.[2] இக்கல்லூரி இந்திய வழக்குரைஞர் கழகம், புது தில்லி மற்றும் ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தற்பொழுது இக்கல்லூரி ஹூப்பள்ளியில் உள்ள கர்நாடக மாநில சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட நிறுவனம் 1991-ல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் நிறுவப்பட்டது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Indira Priyadharsini Law College, Ongole, Prakasam, Andhra Pradesh, India, Group ID:-Contact Address, Phone, EMail, Website, Courses Offered, Admission". Webindia123.com career. 2019-11-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Naukri reCAPTCHA". verify.shiksha.com. 2019-11-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Home Page". iplawcollegeongole.in. 2019-11-05 அன்று பார்க்கப்பட்டது.