இந்திரா காந்தி விளையாட்டரங்கம், புதுச்சேரி
Appearance
இந்திரா காந்தி விளையாட்டரங்கம் | |
---|---|
விளையாட்டு அரங்கம் | |
முழு பெயர் | இந்திரா காந்தி விளையாட்டரங்கம் |
இடம் | புதுச்சேரி, இந்தியா |
அமைவு | 11°55′19″N 79°49′44″E / 11.922°N 79.829°E |
திறவு | |
உரிமையாளர் | புதுச்சேரி மாநில விளையாட்டு குழுமம் |
ஆளுனர் | புதுச்சேரி மாநில விளையாட்டு குழுமம் |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் |
இந்திரா காந்தி விளையாட்டரங்கம் (Indira Gandhi Sports Stadium) என்பது இந்தியாவின் ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் உள்ள ஒரு முக்கிய விளையாட்டு அரங்கமாகும். இந்த விளையாட்டரங்கம் நகரின் அடிப்படை விளையாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் பூப்பந்து மைதானம் மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் உட்புற அரங்கம் தவிரக் கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.[1][2]
இந்த விளையாட்டு அரங்கில் மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடந்துள்ளன. இந்த மைதானம் பாண்டிச்சேரி மாநில விளையாட்டு குழுமத்திற்குச் சொந்தமானது.