இந்திரா காந்தி பல்கலைக்கழகம், ரேவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா காந்தி பல்கலைக்கழகம், ரேவாரி
குறிக்கோளுரைSa Vidya Ya Vimukte
வகைபொது
உருவாக்கம்2013
வேந்தர்அரியானா ஆளுநர்
துணை வேந்தர்எஸ். கே. காகர்[1]
அமைவிடம்
மீராப்பூர், ரேவாரி
, ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.igu.ac.in

இந்திரா காந்தி பல்கலைக்கழகம், ரேவாரி (Indira Gandhi University, Rewari) என்பது 2013ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி, மீர்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது அரியானா அரசால் 2013-ல் நிறுவப்பட்டது.

வரலாறு[தொகு]

1988-ல் நிறுவப்பட்ட மகரிசி தயானந்த பல்கலைக்கழகத்தின் முதுகலை மண்டல மையம் இந்திரா காந்தி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இது 2013ஆம் ஆண்டின் அரியானா சட்டம் எண்.29இன் கீழ் நிறுவப்பட்டது. செப்டம்பர் 13, 2013-ல்[2] இப்பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது.

வளாகம்[தொகு]

பல்கலைக்கழக வளாகம் சுமார் 100 ஏக்கர்கள் (40 ha) சுமார் 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) ) தொலைவில் மீர்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வளாகம் ரேவாரியிலிருந்து 13 கி. மீ. தொலைவிலும்சண்டிகரிலிருந்து 300 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

கல்விப் பிரிவு[தொகு]

பல்கலைக்கழகத்தில் பின்வரும் கல்விப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளது:[3]

  • மானுடவியல்
  • சமூக அறிவியல்
  • இயற்பியல் அறிவியல்
  • உயிர்அறிவியல்
  • கல்வியியல்
  • சட்டம்
  • வணிகவியல், மேலாண்மை மற்றும் சுற்றுலா மேலாண்மை
  • மருந்து அறிவியல்
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
  • பூமி, சுற்றுச்சூழல் & விண்வெளி அறிவியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vice Chancellor". igu.ac.in. Archived from the original on 27 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "About IGU". Indira Gandhi University Meerpur, Rewari. Archived from the original on 25 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Academic Structure" (PDF). Indira Gandhi University Meerpur, Rewar. Archived from the original (PDF) on 22 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]