இந்திரா காந்தி சாலை
இந்திரா காந்தி சாலை | |
---|---|
முந்தையபெயர்கள் : | செஞ்சாலை |
பராமரிப்பு : | கொல்கத்தா மாநகராட்சி |
அஞ்சல் குறி: | 700021 |
அமைவிடம்: | கொல்கத்தா, இந்தியா |
வடக்கு முனை: | ஈடன் கார்டன்ஸ் |
தெற்கு முனை: | வில்லியம் கோட்டை மேற்கு வாயில் |
Construction | |
முழுமை பெற்ற நாள்: | 1820 |
இந்திரா காந்தி சாலை அல்லது இந்திரா காந்தி சரணி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள சாலை ஒன்றாகும். இது முன்னர் செஞ்சாலை என அழைக்கப்பட்டது. மத்திய கொல்கத்தாவில் இச்சாலை ஈடன் கார்டனிலிருந்து (ரசுமோனி பகுதி-கோஸ்தோ பால் சரணி சந்திப்பு) வில்லியம் கோட்டை மேற்கு வாயில் (டஃபெரின் சாலை-அவுட்ராம் சாலை சந்திப்பு) வரை செல்கிறது. வில்லியம் கோட்டை மேற்கு வாயிலுக்கு தெற்கே, செஞ்சாலை கேசுவரினா சாலை/கிதிர்பூர் சாலையாக மாறுகிறது.[1] 1820ஆம் ஆண்டு[2] பவுல்வர்டு சாலை அமைக்கப்பட்டது. இது கொல்கத்தா மைதானத்தை இரண்டாகப் பிரிக்கிறது.[3] பிரித்தானிய அதிகாரிகள் அணிவகுப்புகளை நடத்தும் வகையில் இச்சாலை அமைக்கப்பட்டது.[3] இதனுடைய மேற்பகுதியின் காரணமாக இச்சாலைக்குச் செஞ்சாலை எனப் பெயரிடப்பட்டது.[3]
இரண்டாம் உலகப் போரின் போது, கல்கத்தாவின் மையப் பகுதியில் உள்ள சாலை, போர் விமானங்கள் தரையிறங்கும் பகுதியாகச் செயல்பட்டது. வருடாந்திர கொல்கத்தா பேரோட்டம் செஞ்சாலையில் உள்ள படைக்கலவீரர் மன்றத்தின் வெளிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது.[4] 'இந்திரா காந்தி சாலை' என்ற பெயர் 1985-ல் சூட்டப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Google maps
- ↑ Cotton, H.E.A., Calcutta Old and New, 1909/1980, p 72, General Printers and Publishers Pvt. Ltd.
- ↑ 3.0 3.1 3.2 Robert H. Farquharson (2004). For Your Tomorrow: Canadians and the Burma Campaign, 1941-1945. Trafford. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4120-1536-3.
- ↑ "Ninth edition of Kolkata marathon to be held on March 6". NewsX. 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.