உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரானா
முதிர்ச்சியடைந்த இந்திரான செமிபால்மேட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனூரா
குடும்பம்:
இராணிசாலிடே
பேரினம்:
இந்திரான
மாதிரி இனம்
இந்திரானா பெடோமி
குந்தர், 1876
உயிரியற் பல்வகைமை
14 சிற்றினங்கள் (பார்க்க உரை)
செமிபால்மேட்டா தலைப்பிரட்டை

இந்திரானா (Indirana) என்பது தவளைகள் குடும்பத்தில் (ராணிசாலிடே) உள்ள பேரினம் ஒன்றாகும்.[1] [2] இந்த பேரினத் தவளைகள் அனைத்தும் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றன. இவை சில நேரங்களில் இந்தியத் தவளைகள் என்ற பொதுவான பெயரில் அறியப்படுகின்றன.[3] அதேசமயம் இந்த தவளை இனங்களின் மூதாதை குடும்பத்தின் உறுப்பினர்கள் "பாய்ச்சல் தவளைகள்" எனப்படுகின்றன. [4]

கிட்டத்தட்ட 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மற்ற எல்லா தவளைகளிலிருந்தும் இத்தவளைகள் விலகி தனிப்பேரினமான இந்திரானா தோன்றியுள்ளன. இதில் இந்திரானா குன்டியா என்ற சிற்றினம் "சிறந்த 100 பரிணாம அடிப்படையில் வேறுபட்ட, உலகளவில் ஆபத்தான நீரி நில வாழ்வனவற்றில் ஒன்றாக" கருதப்படுகிறது.[5]

விளக்கம்

[தொகு]

இந்திரானா பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் அனைத்தும் மெல்லிய உடலுடன் கூடிய சிறிய வகைத் தவளைகள் ஆகும். இவை பொதுவாக இலைக் குப்பை அல்லது அதன் அருகிலுள்ள நீரோடைகளில் காணப்படுகின்றன. தலைப்பிரட்டை பின்னங்கால்கள் மற்றும் செதில்களற்ற வாலுடன் உள்ளது. இவை அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்கக் குதித்துச் செல்கின்றன. [5] [6]

இந்திரானா பேரினத்தினைச் சேர்ந்த ஒரு தவளை

வகைபிரித்தல்

[தொகு]

பாரம்பரிய வகைப்படுத்துதலில் இப்பேரினம் ராணிடேயின் உட்குடும்பமான ராணிக்லினேயில் வைக்கப்பட்டது. இதனுடன் நேனோப்ரைசு மற்றும் நிக்டிபேட்ரகசு பேரினங்களும் உள்ளன.[7] ராணிக்லினே, நிக்டிபேட்ராசிடே குடும்பத்தின் கீழும் வைக்கப்படுகிறது.[8] டாரல் ஆர். ஃப்ரோஸ்ட் மற்றும் பலர். (2006) இவற்றை பெட்ரோபெடிடிடே குடும்பத்திற்குள் வைத்தனர். [9] [10]

இனங்கள்

[தொகு]

புதிய இனங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன: இந்திய மாநிலமான கோவாவில் உள்ள நேத்ராவல்லி வனவிலங்கு சரணாலயத்தில் இந்திரானா சேலிகாரி கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 2015ன் பிற்பகுதியில் விவரிக்கப்பட்டது. [11] இந்திரானா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [3]

  • இந்திரானா பெடோமி (குந்தர், 1876)
  • இந்திரானா பத்ராய் கார்க் மற்றும் பிஜு, 2016
  • இந்திரானா பிராச்சிடார்சஸ் (குந்தர், 1876)
  • இந்திரானா சிரவாசி பத்யே , மோடக், மற்றும் தஹானுகர், 2014
  • இந்திரானா துபோசி தஹானுகர் , மோடக், கிருதா, பெயர், பத்யே, மற்றும் மோலூர், 2016
  • இந்திரானா குண்டியா (டுபோயிஸ், 1986)
  • இந்திரானா லெய்தி (பவுலெங்கர், 1888)
  • இந்திரானா லாங்கிக்ரஸ் (ராவ், 1937)
  • இந்திரானா பரமக்ரி கார்க் மற்றும் பிஜு, 2016
  • இந்திரானா சேல்ல்காரி மோடக், தஹானுகர், மற்றும் பாத்தியே, 2015
  • இந்திரானா சரோஜம்மா தஹானுகர் , மோடக், கிருதா, பெயர், பத்யே, மற்றும் மோலூர், 2016
  • இந்திரானா செமிபல்மாடா (பவுலெங்கர், 1882)
  • இந்திரானா டைசோனி தஹானுகர் , மோடக், கிருதா, பெயர், பத்யே, மற்றும் மோலூர், 2016
  • இந்திரானா யாதேரா தஹானுகர் , மோடக், கிருதா, பெயர், பதீ, மற்றும் மோலூர், 2016

மேற்கோள்கள்

[தொகு]
  1. Frost, Darrel R. (2015). "Ranixalidae Dubois, 1987". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
  2. "Ranixalidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
  3. 3.0 3.1 Frost, Darrel R. (2015). "Indirana Laurent, 1986". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
  4. Vitt (2014). Herpetology: An Introductory Biology of Amphibians and Reptiles. Academic Press.
  5. 5.0 5.1 "Gundia Indian Frog (Indirana gundia)". EDGE of Existence programme. Zoological Society of London. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
  6. Veeranagoudar, D. K.; Radder, R. S.; Shanbhag, B. A.; Saidapur, S. K. (2009). "Jumping behavior of semiterrestrial tadpoles of Indirana beddomii (Günth.): relative importance of tail and body size". Journal of Herpetology 43 (4): 680–684. doi:10.1670/08-158.1. 
  7. "Ranixalinae". ZipCodeZoo, BayScience Foundation, Inc. Archived from the original on 2 June 2014. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
  8. "Ranixalinae". ZipCodeZoo, BayScience Foundation, Inc. Archived from the original on 2 June 2014. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
  9. Frost, D. R.; Grant, T.; Faivovich, J. N.; Bain, R. H.; Haas, A.; Haddad, C. L. F. B.; De Sá, R. O.; Channing, A. et al. (2006). "The Amphibian Tree of Life". Bulletin of the American Museum of Natural History 297: 1–291. doi:10.1206/0003-0090(2006)297[0001:TATOL]2.0.CO;2. 
  10. Michael F. Barej; Mark-Oliver Rödel; Legrand Nono Gonwouo; Olivier S.G. Pauwels; Wolfgang Böhme; Andreas Schmitz (2010). "Review of the genus Petropedetes Reichenow, 1874 in Central Africa with the description of three new species (Amphibia: Anura: Petropedetidae)". Zootaxa (2340): 1–49. 
  11. "Newly discovered frog species named after Goan forest officer". Business Standard. 2015-07-29. பார்க்கப்பட்ட நாள் 2015-08-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரானா&oldid=4096784" இலிருந்து மீள்விக்கப்பட்டது