உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திராணி ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராணி ரகுமான்
இந்திய மரபு வழி நடனக் கலைஞர், குச்சிப்புடி நடனத்தை கிராமத்திலிருந்து இந்தியத் தலைநகர் புதுதில்லிக்குக் கொணர்ந்தவர்
பிறப்புஇந்திராணி பாஜ்பாய்
19 செப்டம்பர் 1930
சென்னை, பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு5 பெப்ரவரி 1999(1999-02-05) (அகவை 68)
நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
பணிஇந்திய மரபுவழி நாட்டியக்கலைஞர், நடன இயக்குநர்,
வாழ்க்கைத்
துணை
அபீப் ரகுமான், இந்திய அரசின் தலைமை கட்டிடப் பொறியியலாளர்
விருதுகள்1969: பத்மசிறீ
1981:சங்கீத நாடக அகாதமி விருது

இந்திராணி ரகுமான் (Indrani Rahman) (19 செப்டம்பர் 1930, சென்னை – 5 பெப்ரவரி 1999, நியூயார்க்) ஒரு இந்திய செவ்வியல் நடனப் பெண்மனி ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி மற்றும் ஒடிசி ஆகிய நடன வகைகளை மேற்கத்திய நாடுகளில் பிரபலமடையச் செய்தார். இந்நோக்கத்திற்காக மேலை நாடுகளுக்குச் சென்ற இவர் பின்பு 1976 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நிரந்தரமாகக் குடியேறினார்.

1952 ஆம் ஆண்டில், அவர் இந்திய அழகி அணிவகுப்பில் வென்றார். பின்பு, அவர் அன்னை இராகினி தேவியின் நிறுவனத்தில் இணைந்தார். இந்திய செவ்வியல் அல்லது மரபுவழி நடன வகைகளில் ஒன்றான ஒடிசியை தனது சர்வதேசப் பயணங்களின் போது பிரபலமடையச் செய்தார். 1969 ஆம் ஆண்டில் இந்திராணி பத்மசிறீ விருதினையும், 1969 ஆம் ஆண்டில் நிகழ்த்து கலைகளில் சங்கீத நாடக அகாதமி விருதினையும் மற்றும் தாரக்நாத் தாசு விருதினையும் வென்றார்.

குடும்பமும் பின்னணியும்[தொகு]

இந்திராணி ரகுமான் சென்னையில் (அந்நாளைய மதராசு) பிறந்தார். இவர் இந்தோ-அமெரிக்கச் சபைக்கு சிறிது காலம் தலைவராக இருந்த பல்ராம் பாஜ்பாய் (1880–1962), மற்றும் இராகினி தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை இராம்லால் பாஜ்பாய் வட இந்தியப் பின்னணி கொண்ட ஒரு வேதியியலாளர் ஆவார். இவர் தனது உயர் கல்விக்காக ஐக்கிய அமெரிக்க நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் 1893 ஆம் ஆண்டு பெடோஸ்கெய், மிச்சிகனில் பிறந்த லுயெல்லா செர்மான் என்ற அமெரிக்கரை மணந்தார். [1] (இறப்பு 1982),[2] எசுத்தர் அவரது திருமணத்திற்குப் பிறகு இந்து மதத்தைத் தழுவினார். இதன் காரணமாக அவர் இராகிணி தேவி என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்.[3] இத்தம்பதியினர் 1920 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பினர். ராமலால் லாலா லஜபதி ராயால் தொடங்கப்பட்ட யங் இந்தியா பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு நியூயார்க்கில் இந்தியாவின் கவுன்சிலர் ஜெனரலாகவும் மற்றும் இந்தோ அமெரிக்க சபையின் தலைவராகவும் ஆனார். இதற்கிடையில், இராகினி இந்திய மரபு வழி நடனத்திற்கு மிகுந்த ஆர்வமிக்க ஆதரவாளராக மாறினார். அவரது வாழ்வை இந்திய மரபு வழி நடனக்கலைக்கு புத்துயிர் அளிக்கவும் போற்றிப் பாதுகாக்கவும் அர்ப்பணித்தார். இத்தகைய மாற்றமானது இராகினி, மைசூர் அரசாட்சியின் அரசவம்ச பெருமை மிக்க அரசவைக் கலைஞர் ஜெட்டி தாயம்மாவிடமிருந்து பரத நாட்டியத்தைக் கற்கத் தொடங்கியதிலிருந்து நிகழ ஆரம்பித்தது. பிறகு, அவர், தனது நாட்டியத் திறன்களை சென்னையின் அரசவை மங்கை கௌரி அம்மாவின் பொறுப்பில் இருந்த காலத்தில் கூர்தீட்டிக் கொண்டார்.[4][5][6] இந்திராணி இந்த கலவையான நிறப்பிரிவுகளைச் சார்ந்த தம்பதியினருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். தனது அமெரிக்கப் பூர்வீக அன்னையின் வளர்ப்பில் சுதந்திரமான முறையில் வளர்க்கப்பட்டார். அலங்கார அழகியரின் அணிவகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தப்பட்டார். நாடு முழுவதுமிருந்து அழகியர் அணிவகுப்பில் கலந்து கொள்வதை ஏற்றுள்ள வெகு சில பங்கேற்பாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட இந்திராணி 1952 ஆம் ஆண்டில் இந்தியாவின் நங்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 15 ஆம் வயதில், பள்ளிப்பருவத்தில், இந்தியச் சட்டத்தின்படி திருமணத்திற்குத் தகுதியற்ற வயதில் இவர், தன் வயதைப் போல் இருமடங்கு வயதை உடைய, உலகப்புகழ் பெற்ற கட்டிடடக்கலை வல்லுநர் அபீப் ரகுமானுடன் காதலின் காரணமாக சேர்ந்து வாழ்வதற்காக வீட்டை விட்டுச் சென்றார்.

எஸ். கே. பட்டீல் மற்றும் போட்டியை நடத்திய விளம்பரதாரர்களுடன் இந்திய அழகி இந்திராணி ரகுமான்

மேற்கோள்கள்[தொகு]

  1. Ragini Devi Biography Notable American Women: A Biographical Dictionary Completing the Twentieth Century, by Susan Ware, Stacy Lorraine Braukman, Radcliffe Institute for Advanced Study. Harvard University Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01488-X0-674-01488-X, 9780674014886. Page 172-173.
  2. Book Review South Asian Women Forum
  3. Obituary: Indrani Rehman பரணிடப்பட்டது 15 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் by Kuldip Singh, The Independent (London), 18 February 1999
  4. Rhythm of the new millennium பரணிடப்பட்டது 2010-07-21 at the வந்தவழி இயந்திரம் Leela Venkatraman, The Hindu, 28 October 2001.
  5. Dancing through their lives பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம் The Hindu, 22 September 2002.
  6. HINDU DANCES PRESENTED; Ragini Devi Seen in Theatre of All Nations Performance New York Times, 9 December 1944.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராணி_ரகுமான்&oldid=3845117" இலிருந்து மீள்விக்கப்பட்டது