இந்திராணி முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திராணி முகர்ஜி
பிறப்பு1972
குவகாத்தி
பணிவணிகர்
வாழ்க்கைத்
துணை(கள்)
Peter Mukerjea
குழந்தைகள்சீனா போரா கொலை வழக்கு

இந்திராணி முகர்ஜி (பிறப்பு : இந்திராணி பொறி போரா) முன்னாள் மனிதவளத்துறை ஆலோசகரும், ஊடகத் துறையில் செயலாக்கரும் ஆவர். இந்தியத் தொலைக்காட்சித் துறையில் புகழ்பெற்றிருந்தவரும், ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் முதன்மை செயல் அலுவலருமான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியும் ஆவார். கடந்த 2007ஆம் ஆண்டு பீட்டர் முகர்ஜியோடு இணைந்து ஐ என் எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை தோற்றுவித்ததோடு அதன் முதன்மை செயல் அலுவலருமாய் இருந்தார். அந்த நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளுக்குப் பின்னால், தமது பங்குகளை விற்றதோடு, அந்நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். அவருடைய மகளான சீனா போராவின் கொலை வழக்கில் சந்தேகப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் 2015இல் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

உபேந்திர குமார் போரா, துர்க்கா ராணி போரா ஆகியோருக்கு மகளாக கௌகாத்தியில் பிறந்தார். [1] பொறி போரா என முதலில் பெயரிடப்பட்டார்.[2] கௌகாத்தியில் 10-ம் வகுப்பு படிக்கின்ற சமயத்தில் உள்ளூர் பூசாரி ஒருவரது மகனோடு ஓடிப் போய் விட்டார் எனவும், பின்னர் அவர்களை கண்டு பிடித்து கூட்டி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. 1987யில், 12-ம் வகுப்பு படிக்கின்ற சமயத்தில், விண்ணுப் பிரசாத் சௌதிரி என்பவரை காதலித்திருக்கின்றார். ஆனால், அந்த உறவும் வெகுநாள் நீடிக்கவில்லை. 1986-1987-களில் ஏறத்தாழ நான்கு மாதங்கள் இந்திராணியோடு உறவிலிருந்ததாக விண்ணுப் பிரசாத் சௌதிரி கூறியிருக்கின்றார். அதன் பின்பு அவர்கள் பிரிந்துவிட்டதாகவும். இந்திராணி சில்லாங்கில் உள்ள லேடி கேண் கல்லூரியில் படிக்கச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு, 1988-யில் சித்தார்த்தா தாஸ் என்பவரை காதலித்து மணம் புரியாமலேயே ஒன்றிணைந்து வாழத் தொடங்கியிருந்தார் இந்திராணி.[1] [1] அவர்களுக்கு சீனா போரா என்ற மகள் பிப்ரவரி 11, 1989யில் பிறந்திருக்கின்றார். அவர்களுக்கு 1990-யில் மிக்கேல் போரா என்ற மகனும் பிறந்தார். 1990-யில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரோடு சில காலம் இந்திராணி ஒன்றிணைந்து வாழ்ந்திருந்தார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால், அவர்கள் பின்னர் பிரிந்து விட்டனர். [3] 1990-யில் இந்திராணி தனது இரு பிள்ளைகளையும் கௌகாத்திக்கு அழைத்துச் சென்று அங்கு தமது பெற்றோருக்கு தத்துக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். கொல்கத்தாவில் தங்கியிருந்து கணினி வகுப்புகளுக்குச் சென்றிருக்கின்றார் அவர்.[1] கொல்கத்தாவில் தங்கியிருந்த சமயம் சஞ்சீவ் கண்ணா என்ற தொழிலதிபரைச் சந்தித்துக் காதலித்திருக்கின்றார்.[1] 1993-யில் அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு விதி கண்ணா என்றொரு மகள் 1997-யில் பிறந்திருக்கின்றார். 2001-ஆம் ஆண்டு அவர்கள் குடும்பத்தோடு மும்பைக்கு இடம்பெயர்ந்தனர்.

2002-ஆம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை சந்தித்திருக்கின்றார் இந்திராணி. அதே ஆண்டு சஞ்சீவ் கண்ணாவை விவாகரத்து செய்துவிட்டு பீட்டர் முகர்ஜியை மணந்து கொண்டார்.[1][1] அத் திருமணத்திற்கு பிறகு விதி கண்ணாவையும் தன்னோடு கூடவே அழைத்து சென்றதோடு, பீட்டர் முகர்ஜி விதி கண்ணாவை சட்டப்படி தத்தெடுத்தும் கொண்டிருந்தார்/.[1] இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு மீண்டும் சீனா போரா மற்றும் மிக்கேல் போராவோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட இந்திராணி முகர்ஜி அவர்களை தமது சகோதர்கள் என பீட்டர் முகர்ஜிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார்.[1] 2006-ஆம் ஆண்டு சீனா போராவை மும்பைக்கு அழைத்து வந்ததோடு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் படிக்கவும் வைத்திருந்தார்.[4] கடந்த ஏப்ரல் 2012-யின் பின்னர் சீனா போரா காணமல் போனார்.

2012 முதல் 2015 வரை இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரு மும்பை, பிரிஸ்டல், பிரட்டன் மற்றும் மார்பெள்ளா, ஸ்பயின் ஆகிய நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கின்றனர். [1][2]

சீனா போரா கொலை வழக்கு[தொகு]

ஆகஸ்ட் 25, 2015-யில் இந்திராணி முகர்ஜியை மும்பை காவல்துறையினர் சீனா போரா கொலை வழக்கில் கைது செய்தனர்.[1] இந்தியக் குற்றப்பிரிவு 302, 201, 34 ஆகிய பிரிவுகளில் அவர் கைதாகியிருக்கின்றார். அவர் கைதான பின்னரே சீனா போரா அவருடைய தங்கையல்ல, ஆனால் சொந்த மகள் என்ற தகவல் வெளியுலகிற்கு தெரியவந்தது.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராணி_முகர்ஜி&oldid=2734272" இருந்து மீள்விக்கப்பட்டது