உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திராணி போசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராணி போசு
பிறப்பு15 ஆகத்து 1951 (1951-08-15) (அகவை 75)
கொல்கத்தா, இந்தியா
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்போசு நிறுவனம்
கல்விராசாபசார் அறிவியல் கல்லூரி
(கல்கத்தா பல்கலைக்கழகம்)
ஆய்வு நெறியாளர்சஞ்சல் குமார் மசூம்தார்
விருதுகள்இசுதிரீ சக்தி அறிவியல் சம்மான் விருது (2000)

இந்திராணி போசு (Indrani Bose) 1951 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று பிறந்த ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். கொல்கத்தாவில் உள்ள போசு நிறுவனத்தின் இயற்பியல் துறையில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றுகிறார். திண்மநிலைப் பொருள் கோட்பாடு, குவாண்டம் தகவல் கோட்பாடு, புள்ளியியல் இயற்பியல், உயிரியல் இயற்பியல், அமைப்பியல் ஆகியவை இவரது சிறப்புத் துறைகளாகும்.[1]

கல்வி

[தொகு]

போசு 1981 ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இராசாபசார் அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிப்பாதை

[தொகு]

போசுவின் ஆய்வுத் துறைகளில் பல துகள்களைக் கொண்ட குவாண்டம் அமைப்புகள், குவாண்டம் தகவல் கோட்பாடு, புள்ளியியல் இயங்கியல்,அமைப்பியல் உயிரியல் ஆகியவை அடங்குகின்றன.[2] இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் சிறப்புறுப்பினராகவும்,[3] அலகாபாத்தில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தின் சிறப்புறுப்பினராகவும் உள்ளார்.[4] மேலும், போசு நிறுவனத்தில் வலுவான திண்மநிலைப் பொருள் கோட்பாட்டு ஆய்வுக் குழுவை உருவாக்கியுள்ளார்.[5]

விருதுகள்

[தொகு]

2000 ஆம் ஆண்டு, காந்தக் கணினி அமைப்புகளின் சூழலில் குறைந்த பரிமாண மாதிரி காமில்டோனிய அமைப்புகளுக்கான துல்லியமான தீர்வுகள் குறித்த இவரது ஆய்வுப் பணிக்காக, இசுதிரீ சக்தி அறிவியல் சம்மான் விருதின் முதல் பெறுநராக இந்திராணி போசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Bose, Indrani. "Affiliation, Research Interest". Archived from the original on 3 March 2016. Retrieved 11 October 2014.
  2. ↑ Bose, Indrani. "Affiliation, Research Interest". Archived from the original on 3 March 2016. Retrieved 11 October 2014.
  3. ↑ "Fellow profile". Indian Academy of Sciences. 2016. Retrieved 12 November 2016.
  4. ↑ "NASI fellows" (PDF). National Academy of Sciences, India. 2016. Archived from the original (PDF) on 2015-08-06.
  5. ↑ "StreeShakti - The Parallel Force". www.streeshakti.com. Archived from the original on 28 April 2019. Retrieved 2019-02-16.
  6. ↑ Bose, Indrani. "SSSS Award". Archived from the original on 28 April 2019. Retrieved 11 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராணி_போசு&oldid=4648457" இலிருந்து மீள்விக்கப்பட்டது