இந்திரவருமன்
இந்திரவருமன் Sri Indravarman Sri Maharaja Indrawarman | |||||
---|---|---|---|---|---|
சிறீவிஜய மகா அரசர் | |||||
ஆட்சிக்காலம் | 702 - 728 | ||||
முன்னையவர் | ஜெயநேசன் | ||||
பின்னையவர் | உருத்திர விக்கிரமன் | ||||
|
|
இந்திரவருமன் அல்லது மகாராஜா இந்திரவருமன் (ஆங்கிலம்: Sri Indravarman; இந்தோனேசியம்: Sri Maharaja Indrawarman; சீனம்: Shih-li-t-'o-pa-mo அல்லது (Che-li-t'o-lo-pa-mo) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் மன்னர் ஆவார். சிறீவிஜய மகா அரசர் (Maharaja Sriwijaya) அல்லது கெடத்துவான் சிறீ விஜயா (Kadatuan Srivijaya) எனும் அரச மரபைச் சார்ந்த இவரின் ஆட்சிக்காலம் கிபி 702 - 728 என அறியப்படுகிறது.[1]
சீனாவின் தாங் அரசமரபு மன்னர்களின் அரசவைக்கு இவர், மூன்று தூதர்களை அனுப்பினார் என சான்றுகள் உள்ளன. முதலில் கி.பி 702-இல், இரண்டாவதாக கி.பி 716-இல், மூன்றாவதாக கி.பி 724-இல்; இந்திரவருமன் தம் தூதர்களை அனுப்பி உள்ளார்.
வரலாறு
[தொகு]சீன வரலாற்று மூலங்களில் இவரின் பெயர் சே-லி-டி'ஓ-லோ-பா-மோ (Che-li-t'o-lo-pa-mo) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.[2] இவர் அரேபிய உமையாத் கலீபாக்களுக்கு (Umayyad Caliphate) இரண்டு கடிதங்களை அனுப்பியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக கி.பி. 680-இல் ஒரு கடிதம்; இரண்டாவதாக கி.பி. 718 இல் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.[1]
சீனப் பேரரசருக்கு சிறீவிஜயம் வழங்கிய பரிசுகளில், செங்சி (ts'engchi) எனும் ஒரு கறுப்பின அடிமையும் பட்டியலில் உள்ளது. அரபு மொழி: zanji எனும் சொல்லில் இருந்து செங்சி எனும் சீனச் சொல் பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது.[1]
பன்னாட்டுத் தொடர்புகள்
[தொகு]சிறீவிஜயத்தின் இந்த உறவுகள்; சிறீவிஜயம் தனது ஆட்சிக் காலத்தில், மேற்கு மற்றும் கிழக்கு ஆசியாவிலிருந்து வெளி உலகத்துடன் நல்ல பன்னாட்டு வணிகத்தைக் கொண்டிருந்ததைக் குறிக்கின்றன.[1][3]
இந்திரவர்மனுக்குப் பிறகு அவரின் மகன் உருத்திர விக்கிரமன் என்பவரும் சீனாவிற்குத் தொடர்ந்து தூதர்களை அனுப்பி வந்தார்.[2][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Azra, Azyumardi (2006). Islam in the Indonesian World: An Account of Institutional Formation (in ஆங்கிலம்). Mizan Pustaka. pp. 155–158. ISBN 9789794334300.
- ↑ 2.0 2.1 Journal of the Greater India Society (in ஆங்கிலம்). The Society. 1956. p. 73.
- ↑ Slatyer, Will (2014). Ebbs and Flows of Medieval Empires, AD 900?1400 (in ஆங்கிலம்). Partridge India. pp. 140–141. ISBN 9781482896831.
- ↑ Tōyō Bunko, (Japan) (1972). Memoirs of the Research Department (in ஆங்கிலம்). p. 5.