இந்திய 25 பைசா நாணயம்
இந்தியா | |
Obverse | |
---|---|
Reverse |
இருபத்தி ஐந்து பைசா என்பது ஒரு நாணய அலகாகும். இது நாலணா என்றும் பேச்சுவழக்கில் அழைக்கபட்டது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1⁄4 ஆகும். பைசாவின் சின்னம் p. 1957 முதல் 2002 வரை இருபதி ஐந்து பைசா நாணயங்களை இந்திய அரசு அச்சிட்டது. ஜூன் 30 2011 அன்று இருபது பைசா நாணயங்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. [1] இந்த 25 பைசா நாணயமானது ஒரு ரூபாயின் 1/4 ஆகும்.
அறிமுகமும் செல்லா காசும்
[தொகு]இருபத்தைந்து பைசா நாணயம் 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இருபத்தைந்து பைசா காசானது 2011 சூன் 30 இல் அதிகாரபூர்வமாக செல்லாக்காசாக ஆக்கப்பட்டது.
சிறப்பியல்புகள்
[தொகு]- துருவேறா மிகுகுரோமிய எஃகினால் இருபத்தைந்து பைசா நாணயம் உருவாக்கப்பட்து.[2]
- அது 19 மில்லிமீட்டா் விட்டம் கொண்டது.
- இதன் எடை 2.83 கிராம் கொண்டது.
- 1964 - 1983ல் இருபத்தைந்து பைசா நாணயம் செம்பு நிக்கலால் உருவாக்கப்பட்டன.
நாணய அமைப்பு மற்றும் தகவல்கள்
[தொகு]1957-1963
[தொகு]1957 ஆம் ஆண்டு முதன் முதலாக 25 பைசா நாணயம் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்நாணயம் நிக்கல் உலோகத்தால் செய்யப்பட்டது. இதன் எடை 2.42 கிராம், விட்டம் 18.7 மில்லிமீட்டர், தடிமன் 1.32 மில்லிமீட்டர் ஆகும். இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க லட்சனையும், அதன் இருபக்கமும் ஆங்கிலம், இந்தியில் இந்தியா எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. பின்பக்க நாணயத்தில் 25 நயா பைசா என்பது மையமாகவும், அதன் கீழ் அச்சிடப்பட்ட ஆண்டு, இரு தானியக் கதிர்களும் பொறிக்கப்பட்டிருந்தது. எண்ணின் மேற் பகுதியில் ரூபாயின் நான்கில் ஒரு பகுதி என இந்தியில் அச்சிடப்பட்டிருந்தது.
1964-1972
[தொகு]1964 இல் வெளியிடப்பட்ட 25 பைசா நாணயம் 1957 இல் உள்ளதைப் போல நிக்கல் உலோகத்தால் செய்யப்பட்டது.இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க லட்சனையும், அதன் இருபக்கமும் ஆங்கிலம், இந்தியில் இந்தியா எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த நாணயத்தில் நயா பைசா என்பதற்குப் பதிலாக இருபத்தி ஐந்து பைசா என்று இந்தியில் எழுதியிருந்தது.
1972-1990
[தொகு]1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 25 பைசா நாணயம் நிக்கல் உலோகத்தால் செய்யப்பட்டது. இதன் எடை 2.5 கிராம், விட்டம் 19 மில்லிமீட்டர், தடிமன் 1.36 மில்லிமீட்டர் ஆகும். இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க லட்சனையும், அதன் இருபக்கமும் ஆங்கிலம், இந்தியில் இந்தியா எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. பின்பக்க நாணயத்தில் 25 என்ற எண் மையமாகவும், அதன் கீழ் அச்சிடப்பட்ட ஆண்டு, இரு தானியக் கதிர்களும் பொறிக்கப்பட்டிருந்தது. எண்ணின் மேற் பகுதியில் ரூபாயின் நான்கில் ஒரு பகுதி என இந்தியில் அச்சிடப்பட்டிருந்தது.
எக்கு நாணயம்
[தொகு]1988 இல் இருபத்தி ஐந்து பைசா எக்கு உலோகத்தில் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் எடை 2.83 கிராம், 19 மில்லி மீட்டர் விட்டளவு கொண்டது. 1.55 மில்லிமீட்டர் தடிமம் கொண்டதாகும். இந்நாணயங்களின் முன்பக்கம் மையமாக 25 என்ற எண்ணும், அதன் மேலே சிறியதாக சிங்க லட்சனையும், எண்ணின் இருபக்கமும் ஆங்கிலம், இந்தியில் பைசா, இந்தியா எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பக்கத்தில் காண்டாமிருகம் பெரிய அளவிலும், மேற்புறத்தில் நாணயம் பொறிக்கப்பட்ட ஆண்டும், அச்சிடப்பட்ட அச்சாலை முத்திரையும் இடப்பட்டிருந்தது. இந்நாணயம் காண்டாமிருக நாணயம் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
நினைவு நாணயங்கள்
[தொகு]கிராமப்புற பெண்கள் முன்னேற்றம்
[தொகு]1980 இல் கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் குறித்தான நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் காப்பர் நிக்கல் உலோகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 2.4 கிராம் எடை கொண்டதாகவும், 19 மில்லிமீட்டர் விட்டம் கொண்டதாவும் இருந்தது. இந்நாணயத்தின் முன்பக்கம் மையமாக சிங்க லட்சனையும், அதன் இருபக்கமும் ஆங்கிலம், இந்தியில் இந்தியா எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. குடிசைக்கருகே ஒரு பெண் தானியக் கதிரிலிருந்து தானியத்தை பிரித்தெடுப்பது போன்ற உருவம் மையமாகவும், Rural Women's Advancement - ग्रामीण महिलाओं की प्रगति -1980 என்பது அதனைச் சுற்றியும் பொறிக்கப்பட்டிருந்தது.
உலக உணவு நாள்
[தொகு]1981 இல் உலக உணவு நாளுக்காக 25 பைசா நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் காப்பர் நிக்கல் உலோகத்தால் ஆனது. இதன் எடை 2.5 கிராம், விட்டம் 19.2 மி.மீ ஆகும்.
9 வது ஆசிய விளையாட்டு
[தொகு]1982 இல் 9 வது ஆசிய விளையாட்டிற்காக 25 பைசா நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் காப்பர் நிக்கல் உலோகத்தால் ஆனது. இதன் எடை 2.6 கிராம், விட்டம் 19.2 மி.மீ ஆகும்.
வனவியல்
[தொகு]1985 இல் வனவியலுக்கா 25 பைசா நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் காப்பர் நிக்கல் உலோகத்தால் ஆனது. இதன் எடை 2.5 கிராம், விட்டம் 19 மி.மீ ஆகும்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "20 Paise, India". en.numista.com.
- ↑ https://rbi.org.in/Scripts/ic_coins_5.aspx#25