இந்திய வேளாண் ஆராயச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய வேளாண் ஆராய்ச் நிறுவனம் 16,7,1929 அன்று ஏற்படுத்தப்பட்டு புது டில்லியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் நாடெங்கிலும் பிற பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தோட்டக்கலை, கால்நடை அறிவியல், மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் அறிவியலின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தி கட்டுப்படுத்தும் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது.

இந்நிறுவனம் உலகில் மிகப்பெரிய அமைப்பாகும். இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி உணவுப் பொருள் உற்பத்திக்கு வழிவகுத்தது. அதனால் 1950-51க்கு பிறகு உணவுப் பொருள் உற்பத்தி நான்கு மடங்கும் மீன் உற்பத்தி ஒன்பது மடங்கும் பால் மற்றம் பால் பொட்களின் உற்பத்தி ஆறு மடங்கும் மற்றும் முட்டை உற்பத்தி 14 மடங்கும் அதிகரித்துள்ளது.

சாதனைகள்[தொகு]

உயர் விளைச்சல் தரக்கூடிய நெல், கோதுமை சாகுபடியால் நாடு சுதந்திரம் அடைந்த போது 50 மில்லியன் டன்களாக இருந்த உணவு உற்பத்தி பசுமைப் புரட்சியின் மூலம் 1968ம் ஆண்டு 198 மில்லியன் டன்களாக உயர்ந்தது. மேலும் 2007-08ம் ஆண்டில் மிக அதிக அளவாக 227.32 மில்லியன் டன்கள் உற்பத்தியை எட்டி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.

வெண்மை புரட்சி[தொகு]

வெண்மை புரட்சியால் நாடு சுதந்திரம் அடைந்த தருணத்தில் 17 மில்லியன் டன்களாக இருந்த பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி 1992-93ம் வருடத்தில் 69 மில்லியன் டன்களாகவும் 2001-02ம் வருடத்தில் 88 டன்களாகவும் உயர்ந்துள்ளது.

நீலப்புரட்சி[தொகு]

1951ம் வருடத்தில் 0.75 மில்லியன் டன்களாக இருந்த மீன் உற்பத்தி 1997ம் ஆண்டு 5.4 மில்லியன் டன்களாக உயரச் செய்தது.

மஞ்சள் புரட்சி[தொகு]

சுதந்திரத்தின் போது 5 மில்லியன் டன்களாக இருந்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 25 மில்லியன் டன்களாக மஞ்சள் புரட்சியின் விளைவாக உயர்ந்துள்ளது.

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களை பொருத்தவரையில் இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரும் உற்பத்தியாளராக உள்ளது. மேலும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2008ம் ஆண்டில் 18 சதவீத பங்களிப்பை கொடுத்துள்ளது.

சான்றுகள்[தொகு]

தமிழ்நாடு அரசு 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகம்