இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ICAR Logo

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council of Agricultural Research – ICAR), இந்தியாவின் தலைநகரமான, புது தில்லியில் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்திய நடுவண் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது. இதற்கு முன்னர் இக்குழுமம் வேந்திய வேளாண் ஆய்வுக் குழுமமாக அறியப்பட்டது (Imperial Council of Agricultural Research). இந்நிறுவனம் 1860ல் வேளாணரசு ஆணைக்குழுவின் ஆணைக்கிணங்க 16 சூலை, 1929 ஆம் ஆண்டு சமூககப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுச்சமூகமாக நிறுவப்பட்டது.

இக்குழுமமானது வேளாண்மையில் ஒருங்கிணைந்த, வழிநடத்தல் மற்றும் மேலாண் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளில் தலைச்சிறந்த அமைப்பாக இயங்கிவருகிறது. இதில் தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் விலங்கியல் ஆகியவற்றை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பின் கீழ் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் மற்றும் 45 விவசாயப் பல்கலைக்கழகங்களும் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இது உலகில் காணப்படும் மிகப்பெரிய தாயக வேளாண் அமைப்புகளுள் ஒன்றாகும்.

1950–51 களில் இருந்து வேளாண் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பின் மூலம் பசுமைப்புரட்சியில் முதன்மைப் பங்கும் மற்றும் நாட்டின் விவசாய வளர்ச்சியில் பெரும்பங்காற்றியதுடன், நாட்டின் உணவுதானிய உற்பத்தியில் 4 மடங்கு கூடுதல் பெருக்கமும், தோட்டப்பயிர்களில் ஆறுமடங்கும், மீன் உற்பத்தியில் ஒன்பது மடங்கும், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் முறையே ஆறு மற்றும் 27 மடங்கும் முன்னேற்றம் பெற காரணமாய் இருந்துள்ளன. இது நாட்டின் வேளாண் கல்வியில் தன்னிகர் அடையும் அளவுக்கு பங்களித்துவருகிறது.

இதன் தற்போதைய தலைவர் மத்திய வேளாண் அமைச்சர் ratha mohan singh; முனைவர். ஐயப்பன் இதன் தலைமை இயக்குனராகவும் செயற்பட்டு வருகின்றார்.[1]

மேற்கோள்[தொகு]