இந்திய வெள்ளி சுற்றுகலன் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய வெள்ளி சுற்றுகலன் திட்டம்
திட்ட வகைவெள்ளி (கோள்) சுற்றுப்பாதை
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்டக் காலம்ஒரு வருட திட்டம்[சான்று தேவை]
விண்கலத்தின் பண்புகள்
பேருந்துI-1K[சான்று தேவை]
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு1500 கிலோகிராம்[சான்று தேவை]
ஏற்புச்சுமை-நிறை175 கிலோகிராம்[1]
திறன்500 வாட்டு (அலகு) தாங்குசுமை [1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்2020 க்குப் பிறகு[2][3]
ஏவலிடம்சதீஷ் தவண் விண்வெளி மையம்[3]
சுற்றுப்பாதை அளபுருக்கள்
அண்மைapsis500 கிலோமீட்டர்
கவர்ச்சிapsis60,000 கிலோமீட்டர்

இந்திய வெள்ளி சுற்றுகலன் திட்டம் என்பது  இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெள்ளிக் கோளின் சுற்று வட்டப்பாதையை ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.[4][5][6] இதற்குப் போதுமான நிதியுதவி கிடைத்தால் 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது விண்ணில் ஏவப்படும்.[7]

இறுதிகட்டமைப்பைப் பொறுத்து இதன் தாங்குசுமை 175 கிலோகிராம் [1] மற்றும் ஆற்றல் 500 வாட்டு (அலகு) ஆகும். வெள்ளி (கோளினைச்) சுற்றியுள்ள தொடக்க நீள்வட்டப் பாதையின் சுற்றுப் பாதையானது 500 கிலோமீட்டர் அண்மை வட்டணைப்புள்ளிகளையும் , 60,000 கிலோமீட்டர் கவர்ச்சி மையச் சேவையையும் கொண்டுள்ளது.[8]

திட்டத்தின் தற்போதைய நிலைமை[தொகு]

சந்திராயன் மற்றும் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் போன்றவ்ற்றின் வெற்றியானது செவ்வாய் மற்றும் வெள்ளி (கோள்) போன்ற கோள்களில் எதிர்கால விண்வெளி பயணங்கள் பற்றிய சாத்தியக்கூறுகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது.

இந்திய அரசின் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான நிதியறிக்கையில் வானியல் துறைக்கான நிதி ஒதுக்கீடானது 23 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்த நிதி ஒதுக்கீட்டில் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் மற்றும் இந்திய வெள்ளி சுற்றுகலன் திட்டம் ஆகியவை அடங்கும்.[9]

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]