இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம்
| படிமம்:Indian Farmers Fertiliser Cooperative Logo.svg | |
| வகை | கூட்டுறவு சங்கம் |
|---|---|
| நிறுவுகை | 3 நவம்பர் 1967 |
| நிறுவனர்(கள்) | உதய்பான்சிங்ஜி நட்வர்சிங்ஜி ஜேத்வா |
| தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
| முதன்மை நபர்கள் |
|
| உற்பத்திகள் | உரங்கள் |
| வருமானம் | |
| நிகர வருமானம் | |
| இணையத்தளம் | www |
இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் (சுருக்கமாக:இப்கோ) (Indian Farmers Fertiliser Cooperative Limited), (சுருக்கமாக: IFFCO), பலவகையான உரங்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு பல மாநில கூட்டுறவு சங்கமாகும். இப்கோ இந்தியாவின் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. 1967ஆம் ஆண்டில் 57 உறுப்பினர் கூட்டுறவுகளுடன் தொடங்கப்பட்ட இது, இன்று தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் அடிப்படையில் உலகின் 2வது பெரிய கூட்டுறவுச் சங்கமாக உள்ளது.[2] இதன் உர உற்பத்திகள் சுமார் 35,000 உறுப்பினர் கூட்டுறவுகளுடன் 50 மில்லியனுக்கும் அதிகமான இந்திய விவசாயிகளை சென்றடைகிறது. 3 நவம்பர் 1957 அன்று இப்கோ நிறுவனத்தை பன்மாநில கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
உரங்களின் உற்பததியில் இப்கோ நிறுவனம் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. இப்கோ நிறுவனத்தில் தற்போது பங்குதாரர்களாக 35,000 கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. மேலும் இப்கோ நிறுவனத்தின் உரங்கள் 50 மில்லியன் இந்திய விவசாயிகளுக்கு சென்றடைகிறது. யூரியா உரத்தில் சுமார் 19% சந்தைப் பங்கையும், கலப்பு உரங்களில் சுமார் 31% சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.
இதன் உற்பத்தியில் யூரியா சுமார் 19% சந்தைப் பங்கையும், சிக்கலான உரங்களில் சுமார் 31% சந்தைப் பங்கையும் (P2O5 விதிமுறைகள்) கொண்டு, இப்கோ இந்தியாவின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனம் என்ற தகுதியை கொண்டுள்ளது.
2017ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலில் இப்கோ நிறுவனம் 66வது இடத்தைப் பிடித்துள்ளதுடன்,[3] மேலும் மார்ச் 2021-இல் இதன் நிகர மதிப்பு $2.6 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.[4] மார்ச் 2021 நிலவரப்படி ஒதுக்கீடுகள், வரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு ஈவு தொகை போக $2.6 பில்லியன் நிகர இலாபம் ஈட்டியுள்ளது.[5]
இப்கோ நிறுவனம் குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டம், கலோல் எனுமிடத்தில் 1975ல் முதல் உர ஆலை தொடங்கப்பட்டு, 1997ல் விரிவாக்கப்பட்டது. இது அமோனியா (1100 MTPD) மற்றும் யூரியா (1650 MTPD) ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.[6]
குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகம் அருகே 1975ல் மற்றொரு உர ஆலை தொடங்கப்பட்டு முதலில் 1981 ஆண்டிலும், பின்னர் 1999ஆம் ஆண்டிலும் விரிவாக்கப்பட்டது. இது நைட்ரசன் (Nitrogen (N), பாசுபரசு (Phosphorus (P) மற்றும் பொட்டாசியம் (Potassium) (K). போன்ற நீரில் கரையக்கூடிய உரங்களை உற்பத்தி செய்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அலகாபாத் மாவட்டம், புல்பூர் எனுமிடத்தில் இப்கோ நிறுவனத்தின் ஆலை 1981ல் தொடங்கப்பட்டு 1997ல் விரிவாக்கப்பட்டது. இது அம்மோனியா (9.7 லட்சம் MT) மற்றும் யூரியா (17 லட்சம் MT) ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.[9]

மேலும் உத்தரப்பிரதேசத்தின் ஆன்லா எனுமிடத்தில் இப்கோ நிறுவனத்தின் கிளை 1988ல் தொடங்கப்பட்டு 1996ல் விரிவாக்கப்பட்டது, இது அம்மோனியா (1740 MTPD) மற்றும் யூரியா (1515 MTPD) ஆகியவற்றை உற்பத்தி செய்தது.[7]
ஒடிசா மாநிலத்தின் பாராதீப் எனுமிடத்தில் 2005ல் நிறுவப்பட்ட் இப்கோ கிளையில் பாஸ்பரஸ் அமிலம் (8,75,000 MTPA), சல்பூரிக் அமிலம் (23,10,000 MTPA), NPK (நைட்ரசஜன், பாஸ்பரஸ் & பொட்டாசியம் கலந்த உரம்0 (10:26:26), NPK உரம் (12:32:16), NP (நைட்ரசன் & பாஸ்பரஸ் கலந்த உரம் (20:20:0:13) மற்றும் டைஅம்மோனியம் பாஸ்பேட் (DAP) (18:46:0) தர உரங்களை உற்பத்தி செய்கிறது.[8]
கூட்டாளிகள்
[தொகு]இப்கோ நிறுவனம் பிற நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் கூட்டாளி நிறுவனங்கள்
- இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம்
- இப்கோ eBazar நிறுவனம்
- இப்கோ கிசான் சிறப்பு பொருளாதார மண்டலம்
- இப்கோ கிசான் சஞ்சா நிறுவனம்
- இப்கோ-எம்சி பயிர் அறிவியல் தனியார் நிறுவனம்
- இப்கோ கிசான் நிதி நிறுவனம்
- ஓமன்-இந்தியா உர நிறுவனம்
- இப்கோ கிசான் நிதி லிமிடெட்
- ஓமன் இந்தியா உர நிறுவனம்
- ஜோர்டான் இந்தியா உர நிறுவனம்
- இந்திய பொட்டாஷ் நிறுவனம்
- சிக்கிம் இப்கோ நிறுவனம்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Mishra, Prabhudatta (2 May 2023). "IFFCO FY25 Annual Report" (in en). BusinessLine. https://iffco-public-assets.s3.ap-south-1.amazonaws.com/s3fs-public/2025-06/IIFCO-Annual-Report-2025.pdf?VersionId=UD4erSVoNkLsQ75rKYT3aUh74OzoSP65.
- ↑ "World Cooperative Monitor | ICA Monitor". ICA (in ஆங்கிலம்). Retrieved 2025-12-08.
- ↑ "IFFCO – Fortune India 500". https://www.fortuneindia.com/fortune-500/company/iffco?year=2017.
- ↑ "IFFCO Annual Report 2017-18" (PDF). Archived from the original (PDF) on 24 July 2018. Retrieved 26 July 2018.
- ↑ "IFFCO Annual Report 2017-18" (PDF). Archived from the original (PDF) on 24 July 2018. Retrieved 26 July 2018.
- ↑ "Production unit: Kalol". IFFCO. Retrieved 23 December 2020.
- ↑ "Production Unit: Aonla". IFFCO. Retrieved 23 December 2020.
- ↑ "Production Unit: Paradeep". IFFCO. Retrieved 23 December 2020.