இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இதழ்கள்
இந்தியாவில் நிலவிய காலனியாதிக்கச் சூழலில், பொதுமக்களின் கருத்தை உருவாக்கவும், எழுத்துரிமை, பேச்சுரிமை மூலம் அரசியல் விழிப்புணர்வு மெல்ல விரிந்து பரவவும் இதழியல் துறை பெரும்பங்கு ஆற்றியது. பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்வியால் பெற்ற இதழியல் அறிவு[1] பிரித்தானியருக்கு எதிரான போரில் வலிமை வாய்ந்த கருவியாகப் பயன்பட்டது. தாய்மொழியில் தோன்றிய சுதேசமொழி இதழ்கள் மக்களுக்கு எழுச்சியூட்டின. தாய்மொழி வழியே மக்கள் அரசியல் தொடர்பு கொள்ள இதழ்கள் வழிவகுத்தன. இதன் ஆபத்தை உணர்ந்த பிரித்தானிய அரசு இதனைத் தடுக்க நினைத்தது. 1878-ல் அன்றைய கவர்னர் ஜெனரல் லிட்டன் பிரபு சுதேசப் பத்திரிகைகள் சட்டம் கொண்டு வந்தார். இச்சட்டத்தின் படி சுதேசமொழிகளில் குற்றம் என்று காணப்படும் செய்திகள் ஆங்கில மொழி இதழ்களில் வெளியிடப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகாது என்று கருதப்பட்டது. இதன் மூலம் சுதேச மொழிகளின் மூலம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் என்ற பிரித்தானியரின் அச்சம் நன்கு விளங்கும். இதற்கு சென்னை மாகாணத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில் அப்போது சென்னை மாகாணத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு எந்த இதழும் இல்லை எனக் கருதியதுதான்.[2] ஆனால் அதன் பின்னர் பல புரட்சிக் கருத்துகள் நிறைந்த பல தமிழ் இதழ்கள் தோன்றி விடுதலை உணர்வை வீறுகொண்டு எழச்செய்தன.
விடுதலைப் போராட்ட கால இதழ்கள்
[தொகு]- சுதேசமித்திரன்
- இந்தியா (இதழ்)
- தேசபக்தன்(இதழ்)
- நவசக்தி (இதழ்)
- தமிழ்நாடு (இதழ்)
- லோகோபகாரி (இதழ்)
- தினமணி (இதழ்)
- சுதந்திரம்(இதழ்)
- ஜனசக்தி(இதழ்)
- விமோசனம்
- ஞானபானு
- பிரபஞ்சமித்திரன்(1916)
- இந்திய தேசாந்திரி(1919)
- சேலம் சுதேசாமானி(1887)
- சர்வஜனமித்திரன்(1899)
- ஆனந்தவிகடன்
- தமிழ் நேஷனல் பத்திரிகை(1907)
- வந்தே மாதரம்(1907)
- ஊழியன்(1920)
- குமரன்(1921)
- சுதேசி(1923)
- ஸ்வராஜ்யா(1923)
- தாய்நாடு(1923)
- தேசபந்து (1925)
- இளந்தமிழன்(1928)
- சுயராஜ்ய பேரிகை(1831)
- காந்தி (இதழ்) (1931)
- இந்தியா- நாளிதழ்(1931)
- ஜெயபாரதி(1933)
- மணிக்கொடி(1933)
- ஹிந்துஸ்தான்(1938)
- பாரத தேவி(1939)
- சங்கநாதம்(1938)
புதுச்சேரி இதழ்கள்
[தொகு]- விஜயா(இதழ்) (1909)
- இந்தியா (இதழ்)
- சூரியோதயம்
- கர்மயோகி
- தர்மம்
- தேச சேவகன்
- ஆத்ம சக்தி
- சுகாபிவிருத்தினி
- குடி அரசு
- நியாயாபிமானி
உசாத்துணை
[தொகு]பெ.சு.மணி, "விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள்", விடுதலை வேள்வியில் தமிழகம் (நூல்) மனிதம் பதிப்பகம் வெளியீடு.2012