இந்திய வான் புலனாய்வு இயக்குநரகம்
வான் புலனாய்வு இயக்குநரகம் | |
---|---|
தேசியப் போர் நினைவகத்தில் இந்திய வான் புலனாய்வு இயக்குநரகத்தின் சின்னம் | |
செயற் காலம் | 1941–தற்போது வரை |
நாடு | இந்தியா |
கிளை | இந்திய வான்படை |
பொறுப்பு | இந்திய வான்படை மற்றும் இராணுவ உளவுத்துறைகளுக்கு சரியான நேரத்தில் துல்லியமான வான் கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களை வழங்குதல் |
வான் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Air Intelligence), இந்திய வான்படையின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இது இந்திய வான்படை செம்மையாக செயல்படுவதற்கு, சரியான நேரத்தில், தந்திரோபாய, செயல்பாட்டுத் தேவைகளுக்கு மற்றும் ஒத்திசைக்கப்பட்ட உளவுத் தகவல்களை வழங்குகிறது.
வரலாறு
[தொகு]இரண்டாம் உலகப் போரின் போது வான்படை புலனாய்வு இயக்குநரகம் 1942ல் இந்திய வான்படையின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவை ஆக்கிரமித்த ஜப்பானுக்கு எதிராக இந்த வான்படை புலனாய்வு அமைப்பு திறம்பட செயல்பட்ட்டது.
இப்புலானாய்வு அமைப்பு மிக்-25 மற்றும் செபிகேட் ஜாகுவார் போன்ற உளவு விமானங்கள் மூலம் பெறப்படும் புகைப்படங்கள் மூலம் புலனாய்வு பணிகளை மேற்கொள்கிறது. 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரின் போது, சோவியத் ஒன்றியம் வழங்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் எல்லைப்பகுதிகளில் சீனத் துருப்புகளின் நடமாட்டத்தை கண்டறிய முடிந்தது. இந்திய விண்வெளித் திட்டங்களால் இந்திய வான்படைக்கு சொந்தமாக உளவு செயற்கைக் கோள்கள், விண்ணில் செலுத்தப்பட்டு, வான் புலனாய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. [1]1999 கார்கில் போரின் போது, வான் புலனாய்வு இயக்குநரகம் சிறப்பாக செயல்பட்டு, எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை எளிதில் அடையாளம் காணப்பட்டு, இந்திய வான்படைகள் அவைக்களை தாக்கி அழிக்க முடிந்தது.