இந்திய வான்படையின் ஏஎன்-32 காணாமல்போனமை, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய வான்படை ஏஎன்32
Indian Air Force AN32
முனர் காணாமல் போன அன்டனோவ் ஏஎன்-32 ரக விமானம் ஒன்று
நிகழ்வின் சுருக்கம்
நாள்சூலை 22, 2016 (2016-07-22)
இடம்வங்காள விரிகுடா, இந்தியா
பயணிகள்23
ஊழியர்6 [1]
வானூர்தி வகைஅன்டனோவ் ஏஎன்-32
இயக்கம்இந்திய வான்படை
வானூர்தி பதிவுK2743 [1]
பறப்பு புறப்பாடுதாம்பரம், சென்னை
சேருமிடம்போர்ட் பிளேர், அந்தமான்
இந்திய வான்படையின் ஏஎன்-32 காணாமல்போனமை, 2016 is located in இந்தியா
தாம்பரம் வான்படை நிலையம்
தாம்பரம் வான்படை நிலையம்
போர்ட் பிளேர்
போர்ட் பிளேர்
வானூர்தி நிலையங்களின் ஆரம்ப, இறுதி இடங்கள்

2016 சூலை 22 அன்று இந்திய வான்படையின் அன்டனோவ் ஏஎன்-32 வானூர்தி ஒன்று 29 பேருடன் அந்தமான் நிக்கோபாரின் பிளேர் துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வங்காள விரிகுடாப் பகுதியில் காணாமல் போனது. சென்னையில் இருந்து 280 கிமீ கிழக்கே காலை 9:12 மணிக்கு இவ்வானூர்தி ரேடாரில் இருந்து மறைந்தது.[2][1]

பயணிகள்[தொகு]

இவ்வானூர்தியில் 6 பணியாளர்கள், 12 வான்படை வீரர்கள், ஒரு கடற்படை, ஒரு எல்லைக் காவல்படை, ஒரு தரைப்பட வீரர்கள், மற்றும் 8 பொதுமக்கள் உட்பட மொத்தம் 29 பேர் இருந்துள்ளனர்.[3][4] 8 பொதுமக்களும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[5]

மீட்புப் பணிகள்[தொகு]

இந்தியக் கடற்படையினர் தேடல், மற்றும் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். நீருக்கடியில் சமிக்கைகளை அறிவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, 12 கப்பல்கள், 2 டோர்னியர் வானூர்திகள் ஆகியன தேடல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "IAF An-32 aircraft developed 3 snags in July alone". Indian Express. பார்த்த நாள் 2016-07-22.
  2. "India launches massive search operation for missing military plane". BBC. பார்த்த நாள் 2016-07-22.
  3. 3.0 3.1 "Indian Air Force plane Antonov AN-32 missing, 8 naval armaments personnel onboard". First Post. பார்த்த நாள் 2016-07-22.
  4. "Indian Air Force's AN-32 Plane With 29 Missing After 'Rapid Loss of Altitude'". NDTV. பார்த்த நாள் 2016-07-22.
  5. "Updates: IAF AN-32 aircraft with 29 aboard missing, search on". பார்த்த நாள் 2016-07-22.