உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய வானிலைச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வானிலைச் சங்கம் (Indian Meteorological Society) என்பது இந்தியாவில் செயல்படும் இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது வானிலை மற்றும் தொடர்புடைய அறிவியலின் முன்னேற்றம், பரப்புதல் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த சங்கம் 1956இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டின் போது நிறுவப்பட்டது.[1] 195 தற்பொழுது இச்சங்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 15 கிளைகளைக் கொண்டுள்ளது.[2]

நோக்கங்கள்

[தொகு]
  • வானிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலின் முன்னேற்றம்
  • வானிலை அறிவியலின் அறிவைப் பரப்புதல்
  • விவசாயம் மற்றும் நிலப் பயன்பாடுகள், நீர்ப்பாசனம் மற்றும் ஆற்றல் மேம்பாடு, கடல் மற்றும் காற்றின் வழிசெலுத்தல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான மனித நடவடிக்கைகளுக்கு வானிலை மற்றும் அதனுடன் இணைந்த அறிவியலின் பயன்பாட்டை மேம்படுத்துதல்.

செயல்பாடுகள்

[தொகு]
  • ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் விரிவுபடுத்துதல்
  • கூட்டங்கள், விவாதங்கள், கருத்தரங்கம், மாநாடுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல்.
  • பொருத்தமான வானிலைத் தொடர்பான வெளியீடுகளைக் கொண்டுவருதல்
  • அறிவியல் பணிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Indian Meteorological Society". Retrieved 2026-01-01.
  2. ↑ "Indian Meteorological Society". Retrieved 2026-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வானிலைச்_சங்கம்&oldid=4435894" இலிருந்து மீள்விக்கப்பட்டது