இந்திய வானியல் தொலைநோக்கு நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய வானியல் தொலைநோக்கு நிலையம்
Indian Astronomical Observatory
Hanle observatory.jpg
இந்திய வானியல் தொலைநோக்கு நிலையம், ஹன்லே
நிறுவனம்இந்திய வானியற்பியல் மையம்
அமைவிடம்ஹன்லே, இந்தியா
ஆள்கூறுகள்
உயரம்4,500 மீ (14,764 அடி)
அமைக்கப்பட்ட ஆண்டு2001
இணையதளம்
இந்திய வானியல் தொலைநோக்கு மையம்
Telescopes
இமாலயா சந்திரா தொலைநோக்கி2.01 மீ ரிட்சி-கிரெட்டியென்
HAGARகாம்மாக் கதிர் தொலைநோக்கி

இந்திய வானியல் தொலைநோக்கு நிலையம் (Indian Astronomical Observatory, IAO), இந்தியாவின் லடாக் பகுதியில் லே என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தொலைநோக்கு நிலையம் ஆகும். இந்திய வானியற்பியல் மையம், பெங்களூர். இது இந்திய வானியற்பியல் மையத்தினால் அமைக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இமய மலைப் பகுதியில் இருக்கும் லடாக் மாவட்டத்தின் தலைநகரம் லே. இதற்குத் தென்கிழக்கில் கடல் மட்டத்திலிருந்து நாலரை கிலோ மீட்டர் (4,517 மீட்டர்) உயரத்தில் சிந்து நதியும் ஹன்லே நதியும் பாயும் சிற்றூர்தான் ஹன்லே. அங்கிருக்கும் சரஸ்வதி சிகரத்தின் முகட்டில்தான் ஹன்லே தொலைநோக்கி மையம் நிறுவப்பெற்றிருக்கிறது.

பின்னணி[தொகு]

இந்திய வானியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராம்நாத் கவுசிக் இந்த விண்வெளி மையம் அமைப்பதில் பெரும் பங்காற்றினார். பனிப்பொழிவு, பாறைச் சரிவு போன்ற பல இயற்கை தடைகளைத் தாண்டி 20 டன்களுக்கு மேல் எடையுள்ள கட்டிட அமைப்பை நிறுவ இந்திய இராணுவம் பெரும் உதவி செய்துள்ளது. தற்பொழுது இந்த மையத்தை அணுகும் சாலையின் பராமரிப்பு இந்திய இராணுவத்தின் வசமே உள்ளது.[1]

சந்திரா தொலைநோக்கி[தொகு]

இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற சந்திரசேகரின் நினைவாக ஹன்லே அமைப்பில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கிக்குச் சந்திரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் விட்டம் இரண்டு மீட்டர். இது போக காமாகதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் முதலியவற்றைப் படமெடுக்கும் புகைப்படக் கருவிகளும் பொருத்தப்பெற்றுள்ளன. ஹன்லே மையத்துக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஒளி மூலம் பெறப்படுகிறது .

இயக்கம்[தொகு]

ஹன்லே தொலைநோக்கி மையத்தில் பெறப்படும் தகவல்கள் பெங்களூருவில் உள்ள ஹொசகோட் பகுதியில் அமைத்திருக்கும் இந்திய வானியற்பியல் மையத்துக்கு அனுப்பப்படுகிறது. ஹன்லே மையத்தின் முழுக் கட்டுப்பாடும் இந்த மையத்திடமே உள்ளது.

இடர்ப்பாடுகள்[தொகு]

மாசும் தூசும் இல்லாத வானவெளி, இரவில் செயற்கை வெளிச்சமும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் மிகவும் குறைந்து காணப்படுவது, மிகவும் குறைவாக ஈரப்பதம் கொண்ட காற்று, அமைதியான சூழல், இடையூறு இல்லாத இரவுப் பொழுதுகள், வான்வெளியிலிருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞைகளைத் துல்லியமாக அளிக்கும் கட்டுமானம் என்பதெல்லாம் இந்தப் பகுதியை தேர்ந்தெடுத்தற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும் இந்த மையம் இருக்கும் இடத்தின் வெப்பநிலை மைனஸ் 25 முதல் 30 வரையாகும். எனவே ஆக்சிஜன் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எனவே அறிவியலாளர்கள் தங்கிப் பணியாற்ற கடும் சவாலாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]