இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (Indian Council of Historical Research (ICHR) என்பது இந்திய அரசின் நிர்வாக ஆணையின் மூலம் 27 மார்ச் 1972 அன்று நிறுவப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அமைப்பில் உள்ள வரலாற்றாசிரியர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்களுக்கு அரசு மானியங்கள் மூலம் நிதி உதவி அளிக்கிறது. மேலும் உயர்கல்வித் துறை மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், தனியார் நன்கொடைகள் மற்றும் வெளியீடுகளின் விற்பனை மூலம் நிதியுதவி பெறுகிறது. இதன் கிளைகள் தில்லி, புனே, பெங்களூர் மற்றும் குவகாத்தி நகரங்களில் இயங்குகிறது. இதன் முதன் தலைவர் வரலாற்றாசிரியர் ராம் சரண் சர்மா ஆவார்.[1]இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் அல்லது செயல்பாட்டாளர்களில் வரலாற்றாசிரியர்களான இர்பான் ஹபீப், தபன் ராய்சவுத்ரி மற்றும் பருன் டி ஆகியோர் அடங்குவர்.
இலக்குகள்
[தொகு]- வரலாற்றாசிரியர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கு ஒரு மன்றத்தை நிறுவுதல்.
- வரலாற்றின் புறநிலை மற்றும் அறிவியல் எழுத்துக்கு ஒரு தேசிய நோக்கத்தை வழங்குதல் மற்றும் வரலாற்றின் பகுத்தறிவு விளக்கக்காட்சி மற்றும் விளக்கத்தை வழங்குதல்.
- இதுவரை போதிய கவனம் பெறாத பகுதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றில் ஆராய்ச்சியை மேம்படுத்துதல், துரிதப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
- பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி முயற்சியின் சீரான விநியோகத்தை ஊக்குவித்து ஒருங்கிணைத்தல்.
- சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் வரலாற்று ஆராய்ச்சிக்கான ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெறுதல் மற்றும் தேவையான பரப்புதல் மற்றும் முடிவுகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
அமைப்பு
[தொகு]இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவிற்கு ஒரு கெளரவ தலைவர் தலைமையில் உள்ளது. உறுப்பினர் செயலாளர் அதன் பொதுக்குழு மற்றும் சிறப்பு கூட்டங்களின் போது நிர்வாகக் குழுவின் செயலாளராகவும் மற்றும் தலைவராகவும் செயல்படுகிறார்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இக்குழுவின் தலைவரை, கல்வித் துறையால் கவுரவத் தகுதியில் பரிந்துரைக்கப்படுகிறார். இதன் அன்றாடச் செயல்பாடுகள் குழுவின் உறுப்பினர் செயலாளராகச் செயல்படும் இயக்குனரால் மேற்கொள்ளப்படுகிறது. 1991ம் ஆண்டில் உறுப்பினர் செயலாளர் என்ற தனிப்பதவி உருவாக்கப்பட்டது. இதன் முதல் உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் எம் ஜி எஸ் நாராயணன் ஆவார்.
குழுவின் அமைப்பு
[தொகு]இக்குழுவில் கீழ்கண்ட உறுப்பினர்களாக உள்ளனர்:
- இந்திய அரசால் நியமிக்கப்படும் 19 வரலாற்றாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களில் ஒருவரை குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார்.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒரு பிரதிநிதி. ஒருவர்
- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநர்.
- இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநர்.
- இந்திய அரசின் கல்வித் துறை, பண்பாட்டுத் துறை மற்று நிதித்துறையிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
- இந்திய கல்வி அமைச்சகத்திலிருந்து ஒருவரை மூன்றாண்டு காலத்திற்கு அயல் பணியில் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
வெளியீடுகள்
[தொகு]இக்குழு இணையம் மற்று அச்சு ஊடகமாக இரண்டு இதழ்களை வெளியிடுகிறது. Indian Historical Review எனும் ஆங்கில இதழை அரையாண்டிற்கு ஒரு முறை வெளியிடுகிறது. இந்தி மொழியில் இதிகாஸ் எனும் இதழையும் வெளியிடுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் இணையதளம்
- Indian Council of Historical Research Rejected Inclusion of Muslim dynasties in Exhibition
- News about Indian Council of Historical Research
- Indian Council of Historical Research - Sudhir Chandra - Economic and Political Weekly, Vol. 7, No. 28 (Jul. 8, 1972), pp. 1311-1313
- Society Name Search at www.delhi.gov.in
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The man who made history". The Times of India. 22 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.