உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய வம்சாவளித் தமிழர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்போர் வரலாற்று ரீதியாக இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய தமிழர்களை குறிக்கும்.[1] "இந்திய வம்சாவளித் தமிழர்" என்றால் மலையகத் தமிழர் என்று கருதும் நிலை வரலாற்று அடிப்படையில் தவறானதாகும். மலையகத் தமிழர் 19ஆம் நூற்றாண்டளவில் பிரித்தானியரின் ஆட்சியின் போது இந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் என்பதனால் அவர்களும் "இந்திய வம்சாவளித் தமிழர்" எனும் பகுப்புக்குள் உள்ளடங்குகின்றனர்.[2] என்றாலும், அதற்கு மிக முற்பட்ட காலமான போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்பிருந்தே இலங்கையில் வந்து குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர் என்போரின் வரலாறு மிக நீண்டதாகும். இம்மக்களின் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்வதால், இம்மக்களைத் தோட்டக்காட்டான் என்றும் அழைப்பார்கள்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் : ஒரு மீளாய்வு, மல்லியப்பு சந்தி திலகர்
  2. "இந்திய வம்சாவளி மக்களின் பின்னடைவுக்கு என்ன காரணம்?". தினகரன். 24 பெப்பிரவரி 2013. Archived from the original on 10 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்பிரல் 2024.
  3. இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டுகால துயரம்: "தோட்டக்காட்டான்' என்று அழைக்கப்படுவதுதான் மிச்சம்"

வெளி இணைப்புகள்[தொகு]