உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய ரூபாய் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய ரூபாய்
இயக்கம்ரஞ்சித்
தயாரிப்புசாஜி நடேசன்
பிரித்விராஜ் சுகுமாரன்
சந்தோஷ் சிவன்
கதைரஞ்சித்
இசைசகாபாசு அமான்
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
திலகன்
ரீமா கல்லிங்கல்
டினி டொம்
ஜெகதே சிறீகுமார்
ஒளிப்பதிவுஎஸ். குமார்
படத்தொகுப்புவிஜய் சங்கர்
கலையகம்ஆகத்து சினிமா
விநியோகம்ஆகத்து சினிமிஆ
வெளியீடு26 அக்டோபர் 2011 (2011-10-26)
ஓட்டம்155 நிமி.
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இந்திய ரூபாய் (Indian Rupee, மலையாளம்: ഇന്ത്യൻ റുപ്പി) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இரஞ்சித் (இயக்குநர்) எழுதி இயக்கியுள்ளார். ஆகட்டு சினிமா நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், திலகன், டினி டோம், சகதி சிறீகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஃபகத் பாசில், ஆசிப் அலி (நடிகர்), ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த துணைக் கதாபாத்திரங்களிலும் சிறப்புத் தோற்றங்களிலும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் 26 அக்டோபர் 2011 அன்று தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டது.[1] இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. இது தேசியத் திரைப்பட விருதுகள், சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது|சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது, கேரள மாநிலத் திரைப்பட விருது, சிறந்த திரைப்படத்திற்கான கேரள மாநிலத் திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றது.

கதை

[தொகு]

இந்திய ரூபாய் திரைப்படம் உழைக்காமல் விரைவாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அதுபோன்ற முயற்சிகளை இளைஞர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதையும் நையாண்டியாகச் சித்தரிக்கிறது.

செயப்பிரகாசு அல்லது ஜே.பி. காலிக்கட்டில் செயல்படும் சிறிய அளவிலான ரியல் எசுடேட் தரகராவார். ஒருநாள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு. ஜே.பி. பள்ளிப் படிப்பை இடைநிறுத்தியவர். அவர் தனது உறவினரான பீனாவைக் காதலிக்கிறார். பீனா ஒரு மருத்துவர். ஆனால், ஜே.பி. தன்னைக் காதலிப்பது அவரது பெற்றோருக்குத் தெரியாது.

ஜே.பி. தனது கூட்டாளியான சி.கெச். உடன் இணைந்து நில விற்பனை ஒப்பந்தங்களைத் தேடி வருகிறார். அவர் ராயின் என்ற மூத்த நிலத் தரகரின் கீழ் பணியாற்றுகிறார். ஆனால், விரைவில் அவரிடமிருந்து விலகி தனியாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

தனது அதிட்டம் மாறப்போகிறது என்று ஜே.பி. நம்புகிறார். அப்போது அச்சுத மேனன் என்ற வயதான விதவை ஒருவர் தனது மகனுக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய ஜே.பி.யை அணுகுகிறார். அந்த நில ஒப்பந்தம் நடைபெறவில்லை. இருப்பினும், அச்சுத மேனன் ஜே.பி., சி.கெச். ஆகியோருடன் தங்கியிருந்து அவர்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிறார்.

அதன் பின்னர் ஜே.பி.யின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சில புத்திசாலித்தனமான நகர்வுகள், தந்திரங்களின் மூலம் ஜே.பி. கணிசமான அளவு பணத்தைச் சம்பாதிக்கிறார். ஆனால், இறுதியில் இந்தப் பயணத்தின் மூலம் அவர் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்.

ஜே.பி. ஏமாற்ற முயன்ற "கோல்டன்" பப்பன் அவருக்கு உதவுகிறார். இதன் மூலம் ஜே.பி. தந்திரமான ஒப்பந்தங்களின் மூலம் அல்லாமல், நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உறுதிபூணுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]