இந்திய யுரேனிய கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய யுரேனிய கழகம்
Uranium Corporation of India
भारतीय यूरेनियम निगम
வகைபொதுத்துறை
நிறுவுகை1967
தலைமையகம்ஜாதுகோரா, இந்தியா
முதன்மை நபர்கள்சி. கே. அசுனானி
(தலைவர் & நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைசுரங்கத் தொழில்
உற்பத்திகள்யுரேனியம்
வருமானம்2,034.79 கோடி (US$250 மில்லியன்) (2019) [1]
இயக்க வருமானம்406.52 கோடி (US$51 மில்லியன்) (2019)[1]
மொத்தச் சொத்துகள்3,866.33 கோடி (US$480 மில்லியன்) (2019)[1]
மொத்த பங்குத்தொகை2,833.93 கோடி (US$350 மில்லியன்) (2019)[1]
உரிமையாளர்கள்இந்திய அரசு
பணியாளர்4629 (மார்ச் 2019)
இணையத்தளம்uraniumcorp.in

இந்திய யுரேனிய கழகம் (Uranium Corporation of India) என்பது யுரேனியம் சுரங்கம் மற்றும் யுரேனியம் செயலாக்கத்திற்கான அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1967-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் யுரேனியம் தாது சுரங்கம் மற்றும் தாதுவைனைத் தோண்டி எடுக்கும் பொறுப்பினைக் கொண்டது.[2][3] இந்த கழகத்தின் சுரங்கங்கள் ஜாதுகோரா, பதின், நர்வபகார், துராம்திக் மற்றும் பந்துகுராங்கில் அமைந்துள்ளன.[4]

சுரங்கங்கள்[தொகு]

ஜதுகுடா[தொகு]

இது இந்தியாவின் முதல் யுரேனியம் சுரங்கமாகும். இது 1967-ல் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இந்த சுரங்கம் சார்கண்ட்டு மாநிலத்தில் உள்ளது.[5] யுரேனியம் தாது செயலாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் சுரங்கத்திற்கு அருகிலேயே ஜதுகொடா சுத்திகரிக்கும் ஆலை அமைந்துள்ளது. பதின் மற்றும் நர்வபகார் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் தாதும் இங்கு தயார்ப்படுத்தப்படுகிறது.

பதின்[தொகு]

இந்த சுரங்கம் ஜதுகுடாவிலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது. இது பெரும்பாலான உள்கட்டமைப்பை ஜதுகுடா சுரங்கத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

நர்வபகார்[தொகு]

இந்த சுரங்கம் ஏப்ரல் 1995-ல் தொடங்கப்பட்டது. இது நாட்டின் அதி நவீன சுரங்கமாக அறியப்படுகிறது.

துரம்திக்[தொகு]

துரம்திக் சுரங்கம் ஜாதுகுடாவிற்கு மேற்கே 24 கி. மீ. தொலைவில் ஹவுரா மும்பை தொடருந்து முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துராம்தி, பாண்டுஹராங் மற்றும் மொஹுல்டின் சுரங்கங்களிலிருந்து தாதைத் சுத்திகரிப்பதற்காக துரம்திக் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

பாக்ஜாதா[தொகு]

பாக்ஜதா சுரங்கம் என்பது சார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலத்தடி சுரங்கமாகும்.

புதிய திட்டங்கள்[தொகு]

இந்திய யுரேனிய கழகம் சார்க்கண்டில் இரண்டு நிலத்தடி சுரங்கங்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் யுரேனியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, கடப்பா மாவட்டத்தில் நிலத்தடி சுரங்கம் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.[6]

சர்ச்சைகள்[தொகு]

இந்திய யுரேனிய கழக சுரங்க நடவடிக்கைகள் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சை விளைவிப்பதாக உள்ளூர் சமூகத்தின் சில பிரிவுகளிடமிருந்து விமர்சனம் இருந்து வருகிறது.[7] 1998ஆம் ஆண்டு சக்தி நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்காவால் அனுமதியளிக்கப்பட்ட 63 இந்திய நிறுவனங்களில் இந்திய யுரேனிய கழக நிறுவனமும் ஒன்று.[8] காசி மலைகளில் இந்திய யுரேனிய கழக சுரங்க நடவடிக்கைகள் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என உள்ளூர் பழங்குடியினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Balance Sheet 31.03.2019".
  2. "URANIUM PRODUCTIONFrom ore to yellow cake". தி இந்து. 1999-09-10. Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  3. Correspondent, Vikatan. "விவசாயிகளை சிவக்க வைத்த யுரேனிய குண்டு!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  4. "Mines". UCIL. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  5. "Wikimapia - Let's describe the whole world!".
  6. "Welcome to UCIL India".
  7. Chakrabarti, Ashis (1998-09-19). "Angry villagers take on uranium corporation". Indian Express. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19980919/26251044.html. 
  8. "BARC among 63 blacklisted institutions". 26 July 1998. http://www.indianexpress.com/ie/daily/19980726/20750704.html. 
  9. Bhaumik, Subir (5 May 2003). "Tribes dig in to fight uranium". BBC News. http://news.bbc.co.uk/2/low/south_asia/3000991.stm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_யுரேனிய_கழகம்&oldid=3741722" இலிருந்து மீள்விக்கப்பட்டது