இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி
ஐ. ஐ. எம் திருச்சி
IIM Trichy Logo.png
வகை பொது (வணிகப் பள்ளி)
உருவாக்கம் 2011
தலைவர் எம். தாமோதரன்
பணிப்பாளர் டாக்டர் பிரபுல்லா வை.அக்னிஹோத்ரி[1]
அமைவிடம் திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
10°39′49″N 78°44′41″E / 10.66361°N 78.74472°E / 10.66361; 78.74472
இணையத்தளம் [1]

இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Indian Institute of Management Tiruchirappalli)(ஐஐஎம்டி) இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று.[2] ஜனவரி 4, 2011 அன்று தொடங்கி ஐஐஎம் திருச்சி நாட்டின் பதினோராவது இந்திய மேலாண்மை கழகமாகும்.[3][4] இந்திய மேலாண்மை கழகம், பெங்களூருவின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் ஐஐஎம் திருச்சியின் 2011-2013 தொகுப்புக்கான வகுப்புகள் ஜூன் 15ல் தொடங்கின[5]

முன்னாள் செபி தலைவர் எம். தாமோதரன் ஐஐஎம் திருச்சியின் ஆளுனர் குழுத்தலைவராகவும் ஐஐஎம்-கொல்கத்தாவின் முன்னாள் பேராசிரியர் பிரஃபுல்ல வை. அக்னிகோத்திரி இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.[6]

வளாகம்[தொகு]

கழகம் தற்போது தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் தற்காலிகமாக இயங்குகிறது. வகுப்புகள், மாணவர் விடுதிகள் மற்றும் ஆசிரியர் குடியிருப்புகளுக்கான வசதிகளை தே.தொ.க திருச்சி வழங்குகிறது.

ஐஐஎம் திருச்சியின் நிரந்தர வளாகம் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இடையே உள்ள 200 ஏக்கரில் (நகரிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ள) கட்டப்பட்டு வருகிரறது. [7]

கல்வி திட்டங்கள்[தொகு]

முதுகலை பட்டம்

ஐஐஎம் திருச்சியில் இரண்டாண்டு முழு நேர முதுகலை பட்டம் வழங்கப்படுகின்ற்து. இதன் முக்கிய நோக்கம் இளம் ஆண்கள் மற்றும் பெண்களை தகுதி வாய்ந்த தொழில்முறை மேலாளர்களாகவும் எந்த துறையிலும் வேலை திறன் உடையவர்களாகவும் தலைமைப் பண்புடன் சிறந்த செயல்திறனும் உடையவர்களாகவும் மாற்றி சமூகத்தின் நலனுக்கு பங்களிப்பவர்களாக உருவாக்கவுவதாகும்.[8]

குறிப்புகள்[தொகு]

 • ஐஐஎம் திருச்சி, ரோதக், ராஞ்சி மற்றும் ராய்பூர் ஆகிய மூன்று புதிய ஐ.ஐ.எம்களுடன் இணைந்து 2010 இல் தொடங்க இருந்தது என்றாலும், இது ஒரு முழு நேர இயக்குனருடனும் இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்து 400 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிள் மிகவும் தகுதி மற்றும் அனுபவம் உள்ள 12 பேர் முழு நேர ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்மையாக தொடங்கப்பட்டுள்ளது
 • மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 60ஆக கட்டுப்படுத்த திட்டம் இருந்தது. ஆனால் கழகத்துக்கு கிட்டிய பெரும் வரவேற்பின் காரணமாக 73 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் உட்பட மொத்தம் 88 மாணவர்கள் 2011-2013 கல்வி ஆண்டுக்கான முதுகலை நிரல்கள் முதல் தொகுப்புக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சராசரி CAT மதிப்பெண், 94.69 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • இரண்டு ஆண்டுகளில் மொத்த கட்டணமாக ரூ 10 லட்சம் வரை வாங்கப்படும்; இதனை மாணவர்கள் ஆறு தவணைகளாக கட்டலாம். பழைய ஐ.ஐ.எம்கள் கட்டணம் 13 - 16 லட்சம் ரூபாயும் புதிய ஐ.ஐ.எம்கள் 5-7 லட்சம் வரை கட்டணமாக வாங்குகின்றன.
 • டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி வளாகத் தேர்வு, கூட்டு பயிற்சி, அறிவு பரிமாற்றம், சிறப்பு மாணவர்கள் வெளிநாட்டுக்கு சென்று தங்களது படைப்புகளை விளக்கக்காட்சி தர நிதியுதவி மற்றும் பிற கல்வி நோக்கங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்திற்குள் எடுக்கப்படும் என்று மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Profile".
 2. "Proposed IIMs". The Times Of India. http://timesofindia.indiatimes.com/India/4_new_IITs_6_IIMs_to_come_up/articleshow/2908413.cms. 
 3. "Foundation laid". The Hindu (Trichy, India). January 5, 2011. http://www.hindu.com/2011/01/05/stories/2011010563320900.htm. 
 4. "Foundation laid".
 5. "IIM-T Inaugrated".
 6. "New Director".
 7. "Permanent Campus".
 8. "Programme Offered".