இந்திய மருத்துவ ஓமியோபதி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரம்பரியம் மிக்க இந்திய மருத்துவத்தையும் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க தற்போது செயல்பட்டு வருகின்ற ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ ஓமியோபதி பல்கலைக்கழகம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் தாயகம் என கருதப்படும் தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவத்திற்கான கல்லூரிகளை அரசே நடத்தி வருகின்றது.