இந்திய மத சார்பின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


முன்னுரை

  ‘பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானினும் நனி சிறந்தனவே’ என்றார் பாரதியார். அவ்வகையில் நம் தாய்நாடாம் பாரதநாட்டைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

பாரதம் - பொருளடக்கம்

  ‘பாருக்குள்ளே நல்ல நாடு 
  எம் பாரத நாடு’ என்ற வரி எம் நாட்டின் சிறப்பை விளக்குகிறது எனலாம். 

வேற்றுமையில் ஒற்றுமை

  தெற்கே குமரி முதல் வடக்கே இமயம் வரை நீண்டுள்ள எம் நாடு பலமொழிகள் பல கலாச்சாரங்கள், பல பண்பாடுகள் பெற்றிருப்பினும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தே எம் நாட்டின் சிறப்பம்சமாகும். 

கட்டிடக்கலை

  இஸ்லாமிய கட்டிடக்கலைக்கோர் தாஜ்மஹால் 
  பௌத்த கட்டிடக்கலைக்கோர் புத்தகயா
  சமணக் கட்டிடக்கலைக்கோர் சரவணபெளகொலா
  இந்துக் கட்டிடக்கலைக்கோர் தஞ்சைபெரியகோவில் 

என வானுயர்ந்து கட்டிடங்களைக் கொண்டு விளங்குகிறது எம் பாரதம்

விழாக்கள்

  இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி, பொங்கல், இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரமலான், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்து பிரப்பு, பௌத்தர்கள் கொண்டாடும் புத்தபூர்ணிமா, சீக்கியர்கள் கொண்டாடும் குருநானக் ஜெயந்தி, சமணர்கள் கொண்டாடும் மகாவீர் ஜெயந்தி என பல விழாக்களை கொண்டாடினும்நாம் இந்தியர், நாம் அனைவரும் உடன் பிறப்புகள் என்ற தார மந்திரமே எங்கும் ஒலிக்கிறது. 

சமயசார்பின்மை

  பலவகை மதங்கள், சாரிகள் இருப்பினும் நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழும் மிகப்பெரிய மக்களாட்சி நெறிமுறையே எமது நாட்டின் தலைச்சிறப்பு என்று கூறலாம். 

இந்திய நாடு எம் நாடு இந்தியர் என்பது எம்பேரு எல்லா மக்களும் எம் மக்கள் எல்லோர் வாழ்வும் ஒற்றுமையாம் என்ற கருத்தினைக் கொண்டே நாங்கள் வாழ்கிறோம்.

முடிவுரை

 வேற்றுமையில் ஒற்றுமையாய் 
 எல்லோரும்ஓர் குலம்
 எல்லோரும் ஓர் நிரையாய் - வாழ்வதே எம் இலட்சியம் எனலாம், இதுவே எம் பாரதத்தின் சிறப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மத_சார்பின்மை&oldid=2614194" இருந்து மீள்விக்கப்பட்டது