இந்திய மக்கள் நாடக சங்கம்
1994 postage stamp of India, commemorating the 50th anniversary of IPTA. | |
உருவாக்கம் | 25 மே 1943 மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
---|---|
வகை | Cultural Organization |
President | Prasanna |
General Secretary | Tanwir Akhtar |
சார்புகள் | N/A |
வலைத்தளம் | ipta |
இந்திய மக்கள் நாடக சங்கம் (Indian People's Theatre Association) இந்தியாவிலுள்ள நாடகக் கலைஞர்களின் பழமையான சங்கமாகும். இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சியின் போது 1943 ஆம் ஆண்டில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. மேலும் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான கருப்பொருள்களை ஊக்குவித்தது. இந்திய மக்களிடையே கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோளாக இருந்தது.[1]
தொடக்கம்
[தொகு]இந்திய மக்கள் நாடக சங்கத்தின் பெங்களூர் பிரிவு 1941 இல் உருவாக்கப்பட்டது.[2]இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடகக் கலைஞர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக மும்பை மார்வாரி பள்ளியில் நடைபெற்ற நாடகக் கலைஞர்களின் தேசிய மாநாட்டில் 25 மே 1943 இல் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. 1941 இல் அனில் டி சில்வா என்பவரால் பெங்களூரில் மக்கள் அரங்கம் அமைந்தது. .என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. காந்தியவாதி ரோமைன் ரோலண்டின் பீப்பிள்ஸ் தியேட்டர் பற்றிய கருத்துக்கள் பற்றிய புத்தகத்தால் ஈர்க்கப்பட்ட பிரபல விஞ்ஞானி ஓமி பாபா இப்பெயரை பரிந்துரைத்தார்.[3]
வங்காளக் கலாச்சாரக் குழுவைச் சேர்ந்த பினோய் ராய் ஏற்பாடு செய்த தெரு நாடகங்கள் மூலம் 1942 ஆம் ஆண்டு வங்காளத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட வங்காளப் பஞ்சத்தைப் பற்றி மக்களுக்குத் தெரிவித்தது. இதே போன்று, ஆக்ரா கலாச்சார அணி உட்பட பல கலாச்சார குழுக்கள் உருவாக்கப்பட்டன. தேசிய அளவில் இந்த உள்ளூர் குழுக்களை ஒழுங்கமைக்க இந்திய மக்கள் நாடக சங்கம் உருவாக்கப்பட்டது.[4]
கருத்தியல் ரீதியாக இந்தக் குழுக்கள் இடதுசாரி இயக்கத்தாலும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் பி. சி. ஜோஷி மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஜ்ஜத் ஜாகீர் ஆகியோராலும் ஈர்க்கப்பட்டன.[4]
ஆரம்பகால உறுப்பினர்கள்
[தொகு]பிரிதிவிராசு கபூர், பிஜோன் பட்டாச்சார்யா, பல்ராஜ் சாஹனீ, ரித்விக் கட்டக், உத்பல் தத், கவாஜா அகமது அப்பாஸ், சலில் சௌதுரி, பண்டிட் ரவி சங்கர், ஜோதிரிந்திரா மொய்த்ரா, நிரஞ்சன் சிங் மான், எஸ். தேரா சிங் சான், ஜகதீஷ் ஃபர்யாடி, கலீலி ஃபர்யாதி, ராஜேந்திர ரகுவன்ஷி, சப்தார் மிர், ஹசன் பிரேமானி, அமியா போஸ், சுதீன் தாஸ்குப்தா போன்றவர்கள் குழுவின் ஆரம்ப உறுப்பினர்களாக இருந்தனர் . 1943 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் நாடக சங்கத்தின் மாநாடு, அந்தக் காலத்தின் நெருக்கடியை நாடகத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளைப் புரிந்துகொள்ள உதவுவதற்கும் அதன் யோசனையையும் நோக்கத்தையும் முன்வைத்தது. இந்த மாநாடு இந்தியா முழுவதும் இந்திய மக்கள் நாடக சங்கக் குழுக்களை உருவாக்க வழிவகுத்தது. இந்த இயக்கம் திரையரங்குகளை மட்டுமல்ல, இந்திய மொழிகளில் திரைப்படம் மற்றும் இசையையும் பாதித்தது. இப்போது இது இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் கலாச்சாரப் பிரிவாக உள்ளது. [5]
மேலும் வாசிக்க
[தொகு]- Theatre and Activism in the 1940s. Essay by சோரா சேகல் Crossing boundaries, by Geeti Sen. Orient Blackswan, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1341-5. pp 31–39.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bengali Theatre and Performing Arts. Article in Bangla-online.info பரணிடப்பட்டது 24 ஆகத்து 2006 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Indian People's Theatre Association". Indian People's Theatre Association – Oxford Reference (in ஆங்கிலம்). Oxford University Press. 2003. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780198601746.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-860174-6. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
- ↑ "About IPTA and its history". IPTA. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.
- ↑ 4.0 4.1 "About IPTA and its history". IPTA. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.
- ↑ "Constitution of IPTA". IPTA. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.