இந்திய புவிசார் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.[1]

உலக வணிக அமைப்பின் (WTO) உறுப்புநாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003 இல் நடைமுறைக்கு வந்தது.[2][3] இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.[4]

இந்தியாவின் புவிசார் பொருட்கள்[தொகு]

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[5] பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன.[6] 195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57 ஆகும்.

புவிசார்குறியீடு பெற்ற தமிழக பொருட்கள்[தொகு]

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, மஞ்சள் மாவட்டம் என்று அழைக்கப்படும். சேலம் மாம்பழம்,சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பம் தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடை பாய் ஆகியவை மற்றும் பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. (இப்பட்டியல் முழுமையானதல்ல. விடுபட்ட புவிசார் குறியீடு பொருட்களை பட்டியலில் இணைத்து பட்டியலை மேம்படுத்தலாம்)[7]

வ.எண் ஊர் பெயர் மாவட்டம் சிறப்பு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள விபரம்[8]
1 பண்ருட்டி கடலூர் மாவட்டம் பலாப்பழம் ஆம்
2 சேலம் சேலம் மாவட்டம் மாம்பழம், வெண்பட்டு ஆம்
3 தம்மம்பட்டி சேலம் மாவட்டம் மர சிற்பங்கள் ஆம்
4 மதுரை மதுரை மாவட்டம் மல்லிகைப்பூ, சுங்குடி சேலை ஆம்
5 திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம், ஆரணி பட்டு ஆம்
6 பழனி திண்டுக்கல் மாவட்டம் பஞ்சாமிர்தம் ஆம்
7 தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் மக்ரூன், உப்பு ஆம்
8 கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம் கடலை மிட்டாய் ஆம்[9]
9 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் அல்வா , பத்தமடை பாய் ஆம்
10 ஸ்ரீவில்லிப்புத்தூர் விருதுநகர் மாவட்டம் பால்கோவா ஆம்
11 காரைக்குடி சிவகங்கை மாவட்டம் கண்டாங்கி சேலை, கொட்டான், காரைவீடு, ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள் ஆம் [10]
12 தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வீணை, தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு,நெட்டி மாலை ஆம் ( ஐந்தும் )
13 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு புடவை ஆம்
14 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பூட்டு ஆம்[11]
15 ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம் பிரியாணி ஆம்
16 சிவகாசி விருதுநகர் மாவட்டம் பட்டாசு, நாட்காட்டி ஆம்
17 திருப்பூர் திருப்பூர் மாவட்டம் உள்ளாடை ஆம்
18 கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை ஆம்
19 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழை, நேந்திரம் வாழை, வத்தல், நாட்டு மருந்து,கிராம்பு,கோயில் நகைகள், மயிலாடி கற்சிற்பம், ஈத்தாமொழி நெட்டை தென்னை தேங்காய் ஆம்
20 மார்த்தாண்டம் கன்னியாகுமரி மாவட்டம் தேன் ஆம்
21 தேனி தேனி மாவட்டம் கரும்பு ஆம்
22 ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம் வெண்ணெய் ஆம்
23 பத்தமடை திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பாய் ஆம்[12]
24 திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி ஆம்
25 வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் பிரியாணி ஆம்
26 பவானி ஈரோடு மாவட்டம் ஜமக்காளம் ஆம்
27 ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் பட்டு ஆம்
28 சிறுமலை திண்டுக்கல் மாவட்டம் மலை வாழை ஆம்
29 நாச்சியார்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோயில் குத்துவிளக்கு ஆம்[13]
30 திருப்பாச்சேத்தி சிவகங்கை மாவட்டம் அரிவாள் ஆம்
31 விருதுநகர் விருதுநகர் மாவட்டம் புரோட்டா ஆம்
32 சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை ஆம்
33 உடன்குடி தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி ஆம்
34 மணப்பாறை திருச்சி மாவட்டம் முறுக்கு, உழவு மாடு ஆம்
35 அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு ஆம்
36 பாலமேடு மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு ஆம்
37 சோழவந்தான் மதுரை மாவட்டம் வெற்றிலை ஆம்
38 அரும்பாவூர் பெரம்பலூர் மாவட்டம் மரசிற்பம் ஆம்
39 பொள்ளாச்சி கோவை மாவட்டம் இளநீர் ஆம்
40 ஈரோடு ஈரோடு மாவட்டம் மஞ்சள், ஜவுளிகள் ஆம்[14]
41 சுவாமிமலை தஞ்சாவூர் மாவட்டம் வெண்கலச் சிலை வார்ப்பு ஆம்
42 பெருந்துறை ஈரோடு மாவட்டம் வேல் (ஆயுதம்) ஆம்
43 இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் குண்டு மிளகாய் ஆம்[15]
44 மானாமதுரை சிவகங்கை மாவட்டம் மட்பாண்டம் ஆம்
45 இலவம்பாடி வேலூர் மாவட்டம் முள் கத்திரிக்காய் ஆம்

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. http://www.dinamani.com/latest_news/2014/03/01/புவிசார்-குறீட்டால்-அல்வா-ம/article2084896.ece
  2. The Geographical Indications of Goods (Registration and Protection) ACT, 1999
  3. THE GEOGRAPHJCAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999
  4. "The Protection of Geographical Indications in India: Issues and Challenges" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.
  5. "Introduction to Geographical Indications". Archived from the original on 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.
  6. STATE WISE REGISTRATION DETAILS OF G.I APPLICATIONS 15th September, 2003 – Till Date
  7. "Intellectual Property Office, Chennai". Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.
  8. "இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள புவிசார் குறியீடுகள்". பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. கோவில்பட்டி கடலைமிட்டாய்; புவிசார் குறியீடு கிடைத்தது
  10. Tamil Nadu earns two more GI tags- Dindigul Locks and Kandangi sarees
  11. From Dindigul locks to Kandangi saris: Would GI tags revive an industry?
  12. புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்
  13. "நாச்சியார் கோயில் விளக்குக்கு புவிசார்குறியீடு". பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/mar/07/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3108746.html[தொடர்பிழந்த இணைப்பு]
  15. https://tamil.news18.com/news/ramanathapuram/ramanathapuram-gundu-chillies-geographical-indication-899381.html |bot=InternetArchiveBot }}

வெளி இணைப்புகள்[தொகு]