இந்திய புதர் எலி
இந்திய புதர் எலி | |
---|---|
பரத்பூர் கெலடியோ தேசிய பூங்காவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | கொறியுண்ணி |
குடும்பம்: | முரிடே |
பேரினம்: | கோலுண்டா கிரே, 1837 |
சிற்றினம்: | G. எலியோட்டி
|
இருசொற் பெயரீடு | |
கோலுண்டா எலியோட்டி கிரே, 1837 |
இந்திய புதர் எலி (Indian bush rat)(கோலுண்டா எலியோட்டி) முரிடே எனும் எலிக்குடும்பத்தினைச் சார்ந்த கொறி விலங்காகும். இது கோலுண்டா பேரினத்தின் ஒரே ஒரு உறுப்பினராகும்.[2]
இந்த சிற்றினம் இந்தியத் துணைக் கண்டத்தில் பரவலாக, மேற்கே கோஹாட்டிலுருந்து கிழக்கே பூட்டான் டோர் வரை காணப்படுகின்றது. மேலும் இது இலங்கையிலும் காணப்படுகிறது. 11 வகையான துணைச் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[3][4]
இந்த பேரினத்தின் பெயரானது கன்னடப் பெயரான குலந்தியிலிருந்து பெறப்பட்டது. மேலும் குறிப்பிட்ட சிறப்புப் பெயர் சர் வால்டர் எலியட்எனும் இயற்கையிலாரை நினைவுபடுத்துவதாக உள்ளது.[5] தென்னிந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டதை தவிர மற்றவை லிமிட்டரிசு (வடமேற்கு வரம்புகள்), பாபெரா (பஞ்சாப்), வாட்சோனி (சிந்து), குஜெராட்டி (குசராத்து), பாம்பாக்ஸ் (மும்பை), கொராகினிஸ் (குடகு), காஃபியசு (இலங்கை), நியூவேரா (இலங்கை), மியோத்ரிக்சு (நேபாளம்) மற்றும் கோனோசா (பூட்டான் துவார்சு, ஹசிமாரா ).[4]
விளக்கம்
[தொகு]தலை மற்றும் உடல் நீளம் 12–14 செ.மீ. வால் 9-11 செ.மீ. மஞ்சள் பழுப்பு நிற மேல்புறம் கருப்பு மற்றும் சிவப்பு மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் உள்ளன. வயிற்றுப் பகுதி சாம்பல் நிறத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகளுடனும், ஆரஞ்சு-மஞ்சள் வெட்டு பற்களுடனும், வாலானது, மேற்பகுதியில் அடர் நிறத்துடன் அடிப்பகுதி மஞ்சள் நிறத்துடன் காணப்படும். உடலில் முள்போன்ற உரோமங்களுடன், வட்ட தலையில், தட்டையான மூக்குடன் சிறிய கண்களுடன் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Molur, S.; Nameer, P.O. (2016). "Golunda ellioti". IUCN Red List of Threatened Species 2016: e.T9303A115091717. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T9303A22420024.en. https://www.iucnredlist.org/species/9303/115091717.{{cite iucn}}: error: |doi= / |page= mismatch (help)
- ↑ வார்ப்புரு:MSW3 Muroidea
- ↑ Oldfield, T. (1923). "Scientific results from the Mammal Survey. No. XLII. The distribution and geographical races of the Gulandi Bush Rats (Golunda ellioti)". Journal of the Bombay Natural History Society 29: 373–376.
- ↑ 4.0 4.1 Ellerman, J.R. (1941). The families and genera of living rodents. Volume 2. Family Muridae. London: British Museum (Natural History). pp. 267–268.
- ↑ Blanford, W.T. (1891). The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. Taylor and Francis, London. pp. 427–428.