உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய பில்டர் காப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிந்திய ஃபில்டர் காப்பி என்பது காய்ச்சிய பாலுடன் இந்திய வகை வடிகட்டிகளில் செய்த காப்பி தண்ணீரைக் கலப்பதாகும். காஃபி என்பது தென்னிந்தியாவில் காப்பி என்ற உச்சரிப்புடன் வழங்கப்படுகிறது. இது மெட்ராஸ் ஃபில்டர் காஃபி, மெட்ராஸ் காப்பி, கும்பகோணம் டிகிரி காஃபி, மைலாப்பூர் காஃபி அல்லது மைசூர் ஃபில்டர் காஃபி என்றும் வழங்கப்படுகிறது. காப்பி தமிழில் குளம்பி என்றும் அழைக்கப்படுகிறது.

காப்பி கொட்டைகள்

[தொகு]

காப்பி இந்தியாவில் 1600 இல் இருந்து சாகுபடி செய்யப்படுகிறது. யெமனிலிருந்து இஸ்லாம் துறவி பாபா புடனால்[1] இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் கர்நாடக மலைகள் (கொடகு, சிக்மங்கலூர் மற்றும் ஹாசன்), தமிழ்நாடு (நீலகிரி, ஏற்காடு மற்றும் கொடைக்கானல்), கேரளா (மலபார் பகுதி) மற்றும் ஆந்திரா (அரக்கு பள்ளத்தாக்கு) ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இறுதியில் காப்பி கொட்டைகள், பீ பொ்ரிஇ 10 முதல் 30 விழுக்காடு சிக்கரியும் சேர்த்து செய்யப்படுகிறது.

செய்முறை

[தொகு]

காப்பி வடிகட்டி இரண்டு குவளைகள் கொண்டது. கீழ் உள்ள குவளை வடிகட்டிய காப்பியை சேமிக்கும். மேல் உள்ள குவளை ஓட்டை நிறைந்த அடிப்பாகம் கொண்டது. இது துளையிட்ட வட்டு அழுத்தியும் மூடியுமாகிய இரண்டு கழற்றும் பாகங்களைக் கொண்டது.

மேல் குவளையில் காப்பித் துாள் நிரப்பி, சுடு தண்ணீரை ஊற்றி விட வேண்டும். பின் அதை கீழுள்ள குவளையின் மீது வைத்துவிட வேண்டும். காப்பி காஷாயம் துளித் துளியாக கீழே இறங்கும். இது மற்ற வகை காப்பிகளை விட சுவை துாக்கலாக இருக்கும். இவை டபரா மற்றும் டம்ளர் செட்டில் வழங்குவது வழக்கம். டபரா, சூடான காப்பியை ஆற வைப்பதற்கும், சர்க்கரை மற்றும் கஷாயத்தை பாலுடன் கலப்பதற்கும் பயன்படுகிறது. இது "மீட்டர் காப்பி" என்றும் அழைக்கப்படுகிறது.

கலாச்சாரம்

[தொகு]

தமிழக, கர்நாடக மற்றும் ஆந்திர கலாச்சரங்களில் விருந்தினர்களுக்குக் காப்பி கொடுத்து வரவேற்பது வழக்கம். 17 ஆம் நுாற்றாண்டில் பாபா பூடானால் தென்னிந்தியாவிற்கு வந்த காப்பி ஆங்கிலேயர் ஆட்சியில் புகழ்பெற்றது. இருபதாம் நூற்றாண்டு வரை வெல்லம் மற்றும் தேன் காப்பிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. கேஃப் காஃபி டே, ஸ்டார் பக்ஸ் போன்றவற்றால் காப்பி கலாச்சாரம் மறுமலர்ச்சி அடைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

பாபா புடன் (Baba Budan) என்ற இஸ்லாமியத் துறவியால் ஏழு காப்பி கொட்டைகள் துணியில் மறைக்கப்பட்டு யெமன் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. பின் அதை காடூர் மாவட்டத்திலுள்ள சந்திரகிரி மலையில் மைசூர் மாநிலத்தில் நட்டார். பின்னர் இம்மலைத் தொடர் பாபா புடன் மலைகள் என்றழைக்கப்படுகிறது. அவர் கல்லறையைச் சிக்மங்கலுார் அருகே காண முடியும்.

அரசர் ஜகான்கிர் மற்றும் கிழக்கிந்திய நிறுவன காலகட்டத்திலும் காப்பியைப் பற்றிய சொல்லாடல்கள் கிடைக்கப்படுகின்றன.[2] 1950 களில் இந்தியன் காப்பி ஹெளஸ்களால், இந்தியன் பில்டர் காப்பிகள் பிரபலப்படுத்தப்பட்டன.

பெயா்

[தொகு]

கர்நாடகத்தில் பூந் பிஸ்நீரு என்று இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் வரை பிரபலமாக வழங்கப்பட்டது.

டிகிரி காப்பி என்பது உயர்தர காப்பியைக் குறிக்கும். பாலின் அடர்த்தியை அறிய உதவும் பால்மானியை வெப்பமானியுடன் தவறாகத் தொடர்புபடுத்தியதால் டிகிரி காப்பி என்ற பெயர் ஏற்பட்டது என கூறுவர்.[3]

காப்பியுடன் கலக்கப்படும் சிக்கரி என்ற சொல்லிலிருந்து டிகிரி காப்பி தோன்றியது என்றும் கூறுவர்.

மற்றொரு விளக்கம், முதல் முறை எடுக்கப்படும் கஷாயத்திலிருந்து செய்யப்படும் காப்பியே டிகிரி காப்பி என்றும் கூறுவா். சில வீடுகளில் இரண்டு மூன்று முறை கஷாயம் எடுக்கப்படுவதும் உண்டு.

குறிப்புகள்

[தொகு]
  1. Wild, Anthony (10 April 1995). The East India Company Book of Coffee. Harper Collins. ISBN 0004127390.
  2. Aparna Datta. "From Mocha to Mysore: A Coffee Journey"
  3. http://www.thehindu.com/features/metroplus/Food/kumbakonam-degree-coffee/article4034194.ece Kumbakonam Degree Coffee, The Hindu, 27-10-2012. Retrieved 03-08-2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_பில்டர்_காப்பி&oldid=2762267" இலிருந்து மீள்விக்கப்பட்டது