இந்திய பட்டாம்பூச்சி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய பட்டாம்பூச்சி மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கீடோடான்
இனம்:
கீ. மிட்ரேடசு
இருசொற் பெயரீடு
கீடோடான் மிட்ரேடசு
குந்தர், 1860

இந்தியப் பட்டாம்பூச்சி மீன் (Indian butterflyfish)(கீடோடான் மிட்ரேடசு), தலைப்பட்டை பட்டாம்பூச்சி மீன் என்றும் அழைக்கப்படுகிறது. இது கடல் கதிர்-துடுப்பு மீன் வகையாகும். இது கீட்டோடொன்டிடே குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி மீன் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இந்தியப் பட்டாம்பூச்சி மீனின் உடல் மஞ்சள் நிறமுடையது. இது இரண்டு பரந்த, கருப்பான சாய்வான பட்டைகளைப் பக்கவாட்டில் கொண்டுள்ளது.[2] கண்ணுக்குக் கீழே ஆரஞ்சு நிறத்தில் ஒரு கருப்புக் கண் பட்டை உள்ளது.[3] இடுப்பு துடுப்பு, முதுகு துடுப்பு, குத மற்றும் வால் துடுப்புகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.[2] முதுகுத் துடுப்பில் 8 முள்ளெலும்புகளும் 18-20 மென்மையான கதிர்களும் உள்ளன. குதத் துடுப்பில் 3 முள்ளெலும்புகளும் 14 முதல் 15 மென்மையான கதிர்களும் உள்ளன. இந்த மீனின் அதிகபட்ச நீளம் 14 சென்டிமீட்டர்கள் (5.5 அங்) ) வரை வளரக்கூடியது.[4]

பரவல்[தொகு]

இந்தியப் பட்டாம்பூச்சி மீன்கள் இந்தியப் பெருங்கடலில் பரவிக் காணப்படுகின்றன. ஆத்திரேலியாவில் உள்ள கொக்கோசு தீவுகள் மற்றும் கிறிஸ்துமசு தீவு, மாலத்தீவுகள், மொரீஷியஸ், ரீயூனியன், அமிரண்டே தீவுகள் மற்றும் சீசெல்சு உள்ள காசுமோலிடோ தீவு மற்றும் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் சாகோஸ் தீவுக்கூட்டம் ஆகியவற்றில் காணப்படுகிறது.[1]

வாழ்விடம் மற்றும் உயிரியல்[தொகு]

இந்தியப் பட்டாம்பூச்சி மீன் என்பது ஒப்பீட்டளவில் ஆழமான நீரில் காணப்படும் மீனினமாகும். இது 22 முதல் 80 மீட்டர்கள் (72 முதல் 262 அடி) ) உள்ள ஆழமான பகுதியில் வாழ்கிறது (பொதுவாக 50 முதல் 68 மீட்டர்கள் (164 முதல் 223 அடி) . பாறைகளின் செங்குத்தான வெளிப்புற துளிகள், இடிபாடுகள் மற்றும் கருப்பு பவளம் மற்றும் கடல் விசிறிகள் வளரும் பகுதிகளில் 5 மீன்கள் வரையிலான சிறிய குழுக்களாக் காணப்படுகிறது. இது முட்டை இடும் சிற்றினமாகும்.[4] இந்த சிற்றினம் மிதவை விலங்குகளை மற்றும் கடலடிப் பகுதியில் காணப்படும் முதுகெலும்பில்லாத உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

இந்தியப் பட்டாம்பூச்சி மீனை முதன்முதலில் 1860ஆம் ஆண்டில் செருமனியில் பிறந்த பிரித்தானிய விலங்கியல் நிபுணர் ஆல்பர்ட் குந்தர் (1830-1914 ) மொரிசியசை சார்ந்தது எனக் கூறியுள்ளார்.

பயன்பாடு[தொகு]

இந்தியப் பட்டாம்பூச்சி மீன், மீன் வணிகத்தில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஏனெனில் இந்த மீன் ஆழமான நீரில் எப்போதாவது சேகரிக்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Pyle, R.; Myers, R.F.; Rocha, L.A.; Craig, M.T. (2010). "Chaetodon mitratus". IUCN Red List of Threatened Species 2010: e.T165666A6085100. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T165666A6085100.en. https://www.iucnredlist.org/species/165666/6085100. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1 Bob Goemans (2012). "Chaetodon mitratus". Saltcorner. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
  3. Bray, D.J. (2015). "Chaetodon mitratus". Fishes of Australia. Museums Victoria. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
  4. 4.0 4.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Chaetodon mitratus" in FishBase. April 2006 version.