இந்திய நீதிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய நீதிக் கட்சி (IJP)
தலைவர் உதித் ராஜ்
தொடக்கம் 9 திசம்பர் 2012
கலைப்பு 24 பிப்ரவரி 2014
தலைமையகம் 5, பூசா சாலை, 3வ்து மாடி, கரோல் பாக், புது தில்லி, இந்தியா 110005
கொள்கை

சமூக ஜனநாயகம்

தலித் பொதுவுடைமை
இ.தே.ஆ நிலை மாநில கட்சி [1]

இந்திய நீதிக் கட்சி (INDIAN JUSTICE PARTY-IJP) என்ற அரசியல் கட்சியானது உதித் ராஜ் என்பவரால் 2003ல் நிறுவப்பட்டது. இவர் இந்திய வருவாய்ப் பணி அதிகாரியாக பணியாற்றினார். 2003ல் இந்திய நீதிக் கட்சியை உருவாக்க அவர் தனது பதவியைப் பணித்துறப்பு செய்துவிட்டார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பு[தொகு]

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடிகள் கூட்டமைப்பின் தேசியத் தலைவராகவும் நிறுவனராகவும் இருந்த உதித்ராஜ் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு.ராஜ்நாத் சிங் முன்னிலையில் 2014 பிப்ரவரி 24ஆம் நாள் பாரதிய ஜனதா கட்சியுடன் தனது கட்சி இணைப்பின் அறிவிப்பை வெளியிட்டார். ஆட்சியிலும், நாட்டை வழிநடத்துவதிலும் தலித் வகுப்பினர்களின் பங்கு குறித்து பாரதிய ஜனதா கட்சியினருடன் பேசிய பின் அக்கட்சியில் இணைந்ததாக உதித் ராஜ் கூறினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_நீதிக்_கட்சி&oldid=2334305" இருந்து மீள்விக்கப்பட்டது