இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதைத் தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது.

  1. இந்தியத் தொழில் பழகுனர் சட்டம் - 1961 (Apprentices Act-1961)
  2. இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 (Employees Provident Funds Act-1952)
  3. இந்தியத் தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் (Employees State Insurance Act-ESI Act)
  4. இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் -1948 (Factories Act-1948)
  5. இந்திய போனஸ் பட்டுவாடா சட்டம் -1965 (Payment of Bonus Act-1965)
  6. இந்திய பணிக்கொடை சட்டம் – 1972(Payment of Gratuity Act 1972)
  7. இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம் -1947(Industrial Disputes Act 1947)
  8. இந்தியத் தொழிற்சாலைகள் (நிலை ஆணைகள்) சட்டம் -(Industrial Employment ( Standing Orders) Act
  9. இந்திய குறைந்த பட்ச ஊதிய சட்டம் (Minimum Wages Act)
  10. இந்தியத் தொழிற்சங்கங்கள் சட்டம் (Trade Unions Act)
  11. இந்தியத் தொழிலார்கள் ஈட்டுறுதிச் சட்டம் (Workmen's Compensation Act -1923)

தொழிற்சாலைகள் சட்டம் 1948[தொகு]

தொழிலாளர்கள் , தொழிற்சாலைகளில் பணிபுரியும் சூழ்நிலையை முறைப்படுத்துவதற்காக இந்திய அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களுள் தொழிற்சாலைகள் சட்டம் 1948 (Factories Act 1948) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நோக்கங்கள்[தொகு]

பணிபுரியும் சூழ்நிலை, வேலை நேரம், விடுமுறை நாட்கள், மிகைநேரப்பணி, குழந்தைகளை பணிக்கு அமர்த்துதல், பெண்கள் மற்றும் இளையோர், பாதுகாப்பு,ஆரோக்கியம் மற்றும் தொழிலாளர்களின் நலன் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த சட்டம் விவரிக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முறை ஆபத்துகள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களைக் காப்பது இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்த சட்டம் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

வரையறை[தொகு]

  1. தொழிற்சாலை :
  2. நாள்:
  3. தொழிலாளி:
  4. ஆபத்தான செயல்முறை
  5. உற்பத்திச் செயல்முறை
  6. மின்சக்தி
  1. ஆய்வாளர்கள் (பிரிவு 8)
  2. ஆய்வாளர்களின் அதிகாரங்கள் (பிரிவு 9)
  3. சான்றளிக்கும் மருத்துவர்கள் (பிரிவு 10)
  4. ஆரோக்கியம் :

இச் சட்டத்தின் பிரிவுகள் 11 முதல் 20 வரை தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன் பற்றி குறிப்பிடுகின்றன

  1. பிரிவு 11 : தூய்மை :
  2. பிரிவு 12 : வீணான பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல்  :
  3. பிரிவு 13 :காற்றோட்டம் மற்றும் வெப்ப நிலை:
  4. பிரிவு 14 :தூசு மற்றும் புகை:
  5. பிரிவு 15 :செயற்கையான ஈரப்பதன் :

தொழிற் சங்கங்கள் சட்டம் 1926[தொகு]

இந்திய அரசாங்கம், 1926 ஆம் ஆண்டு தொழிற் சங்கங்கள் சட்டத்தை இயற்றி அமல் படுத்தியது.ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் தொழில் சங்கத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.தங்கள் பகுதியில் உள்ள தொழில் சங்கங்களுக்கான பதிவாளரிடம் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் கடன்கள், தங்களிடம் உள்ள பொது நிதி, தங்களுடைய வருமானம் மற்றும் செலவு போன்ற அனைத்து விவரங்களையும் தங்களது பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

தொழில் தராறுகள் சட்டம் 1947[தொகு]

தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்

ஊதியம் வழங்கல் சட்டம் 1936[தொகு]

ஊதியம் வழங்கல் சட்டம் 1936 அமலுக்கு வருவதற்கு முன் தொழிலாளர்கள் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.செய்த வேலைக்கு சம்பளம் வழங்காதிருத்தல்,போதுமான அல்லது நியாயமான ஊதியம் வழங்காதிருத்தல்,குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காதிருத்தல், எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்காதிருத்தல், தொழிலாளர்கள் மீது தேவையில்லாத தண்டனைகளை விதித்தல் போன்ற பலவழிகளில் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு வந்தனர்.

குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948[தொகு]

நோக்கம்[தொகு]

தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதே குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் முக்கிய நோக்கம்.அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்ச ஊதியத்தின் அளவை நிர்ணயித்து தொழிலாளர்கள் பாதுகாக்கப் படுகின்றனர்.
இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.

இ.எஸ்.ஐ.சட்டம் 1948[தொகு]

சமூக நலனைக் காப்பதை நோக்கமாகக்கொண்டு இ.எஸ்.ஐ.சட்டம் 1948 இயற்றப்பட்டது.

தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தை உருவாக்குதல் (ESI Corporation )(பிரிவு 4)
தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் அதிகாரங்கள் : (Powers of ESI Corporation )
தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் பணிகள் :
பங்களிப்புகள் (Contributions)
தொழிலாளர் மநிலக் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் தொழிலாளர்கள் பெறும் பயன்கள் :

  1. மருத்துவ நன்மைகள் (Medical Benefits)
  2. நோயுறும்போது கிட்டும் பயன்கள் (Sickness Benefit)
  3. பேறுகாலத்தில் பெறும் பயன்கள் (Maternity Benefit)
  4. ஊனமடைந்தால் பெறும் பயன்கள் (Disability Benefits)
  5. தொழிலாளியை சார்ந்திருப்போருக்கு கிட்டும் பயன்கள்(Dependent's Benefits) :

வெளி இணைப்புகள்[தொகு]

இ.எஸ்.ஐ.சட்டம் 1948