இந்திய தேசியப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் தேசியப் பறவை மயிலாகும். இதன் அறிவியல் பெயர் பவோ கிரிஸ்டேடஸ் (Pavo cristatus). இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக காணப்படுகின்றன. இதற்கு விசிறி போன்ற இறகுகளை உடைய கொண்டை தலையில் அமைந்திருக்கும். கண்ணுக்கு அடியில் வெள்ளைநிறப் பட்டை ஒன்று காணப்படும். இது நீண்டு மெலிந்த கழுத்தை உடையது. இதன் ஆண் இனம் பெண் இனத்தைவிட வண்ணமயமாகக் காணப்படும். ஆண் இனத்தின் மார்பும் கழுத்தும் சற்று ஒளிரும் நீல நிறத்தில் இருக்கும். வெண்கல நிறமும் பச்சையும் கலந்தாற் போன்ற வண்ணத்தில் சுமார் 200 நீண்ட தோகைகளைக் கொண்டதாக இதன் வால் பகுதி இருக்கும். பெண் இனம் பழுப்பு நிறத்தில் ஆண் இனத்தைவிடச் சற்றுச் சிறியதாகவும், வால் பகுதி குறைந்ததாகவும் இருக்கும். ஆண் மயில் தன் துணையை கவருவதற்காக கார் மேகம் சூழ்ந்திருக்கும் நேரத்தில் தோகையை விரித்து ஆடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_தேசியப்_பறவை&oldid=739549" இருந்து மீள்விக்கப்பட்டது