இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியுதவிபெறும் கழகங்கள் 4 (பச்சை); பொது-தனியார் கூட்டாண்மை அமைப்புகளின் கழகங்கள் 6 (சிவப்பு).

இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (IIITs) இந்தியாவில் உயர்கல்விக்காக நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் குழுக்களாகும், இதன் நோக்கம் தகவல் தொழிநுட்பக் கல்வியை மேம்படுத்துவதாகும். இதில் நான்கு கழகங்கள் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியால் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.[1] மேலும் 20 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்களில், இளநிலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE / GATE) வழியாக நடைபெறுகிறது.

இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப கல்விமுறை பரந்த அளவில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

  1. மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிதியுதவி பெறும் நிறுவனம்
  2. மாநில அரசு & தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதியுதவி பெறும் நிறுவனம்.


  1. "Technical Education – Centrally Funded Institutions". mhrd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.