இந்திய காரகால் பூனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய காரகால் பூனைகள் caracal-felis caracal. அளவில் வீட்டுப் பூனையைவிடப் பெரியது. நீண்ட கால்கள்,குறுகிய வால்,முக்கோண வடிவில் கூர்மையான காதுகள்,முனையில் கொத்தான முடி ஆகியன காணப்படும்.

உடல் முழுதும் சிவப்பு கலந்த சாம்பல் நிறமும்,வயிற்றுப் பகுதியில்மஞ்சள் அல்லது வெளிறிய நிறமும் கொண்டிருக்கும்..

இந்தியாவின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில்உள்ள வறண்ட அல்லது ஓரளவு வறண்ட பகுதிகளில் காணப்படும்.

விரைந்து செயல்படக் கூடிய இப்பூனையானது,பறக்கும் பறவைகளைக் கூட வேட்டையாட வல்லது.இது பெரும்பாலும் சிறியவகைப் பாலூட்டிகளையும்,பறவைகளையும் தின்று வாழ்கிறது.