இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனம்
![]() மும்பையில் உள்ள இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனம் வைர விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் அந்நாள் குடியரசுத் துணைத் தலைவர் முகம்மது அமீத் அன்சாரி. முன்னிலை - அந்நாள் மகாராட்டிர ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ், முதல் அமைச்சர் தேவேந்திர பத்னாவிசு, மற்றும் பலர். | |
துறை மேலோட்டம் | |
---|---|
வகை | தேசிய உச்சநிலை அமைப்பு |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம் |
வலைத்தளம் | www |
இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனம் (Insurance Institute of India) 1955இல் மும்பையில் நிறுவப்பட்ட இந்தியாவின் காப்பீட்டு கல்விக்கான ஒரே தேசிய உச்ச அமைப்பாகும். முன்பு ஜே.சி. செடல்வாட் நினைவு காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (பதிவானது) என அறியப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் காப்பீட்டு காப்பீட்டுக் கல்வி மற்றும் பயிற்சியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது[1]. இந்த கல்வி நிறுவனம் பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்துகிறது. இது இந்தியாவில் காப்பீட்டு கல்விக்கான ஒரே தொழில்சார் கல்வி நிறுவனமாகும்.
வெற்றி பெறும் தேர்வுக்குட்பட்டோருக்கு இக்கல்வி நிறுவனம் சான்றிதழ்கள் மற்றும் சன்னதுகள் வழங்குகின்றது. இவை இந்திய அரசாங்கம், இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை மற்றும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும்[2]. உள்ள காப்பீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த தகுதிகள் ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒத்த நிறுவனங்களால் அவற்றின் சில ஆவணங்களில் இருந்து விலக்கு அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன[3]. நாடு முழுவதும் பரவியுள்ள 91 இணைப்புள்ள கல்வி நிறுவனங்களின் இருப்பு, மற்றும் இலங்கை காப்புறுதி கல்வி நிறுவனம், இலங்கை காப்பீட்டு கல்விச்சாலை, மற்றும் ஆர்.ஐ.சி.பி. காப்பீட்டு கல்வி நிறுவனம், பூட்டான், போன்ற சிறப்புகள் இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனத்தின் கௌரவம், மற்றும் தொழில்முறை நற்பெயருக்கு சாட்சியமளிக்கவும் செய்கின்றன[4].
பொது மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் காப்பீடு மற்றும் இடர் மேலாண்மை சம்பந்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களையும் இந்நிறுவனம் ஆதரிக்கிறது.[5][6]
குறிப்புகள்
[தொகு]- ↑ "நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் (26-ஆகத்து-2015) இந்திய குடியரசு துணைத் தலைவர் உரை". Retrieved 14 அக்டோபர் 2016.
- ↑ "இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனம் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பட்டய காப்பீட்டு கல்வி நிறுவனத்தின் இணை நிறுவனமாகும்". Archived from the original on 14 அக்டோபர் 2023. Retrieved 12 October 2023.
- ↑ "காப்பீட்டுத் தகுதிகளின் குறுக்கு அங்கீகாரம்" (PDF). Retrieved 12 அக்டோபர் 2023.
- ↑ "பத்திரிகை தகவல் பணியகம் (குடியரசு துணை தலைவர் செயலகம், இந்திய அரசு) report". Retrieved 14 October 2016.
- ↑ "இந்திய போக்குவரத்து கழகத்துடன் இணைந்து இந்திய தளவாடங்கள் மற்றும் கிடங்குத் தொழில், அவர்களது வாடிக்கையாளர்களின் காப்பீட்டுத் தேவைகள் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட்டது" (PDF). Retrieved 14 அக்டோபர் 2023.
- ↑ "பேரிடர் இடர் நிதி, காப்பீடு மற்றும் இடர் பரிமாற்ற பணிக்குழு அறிக்கை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது (உள்துறை அமைச்சகம், இந்திய அரசு)" (PDF). Retrieved 14 அக்டோபர் 2023.