இந்திய கட்டடக் கலைஞர் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய கட்டடக் கலைஞர் கழகம்
The Indian Institute of Architects
சுருக்கம்IIA
உருவாக்கம்மே 12, 1917; 106 ஆண்டுகள் முன்னர் (1917-05-12)
தலைமையகம்மும்பை, இந்தியா
வலைத்தளம்Official website

இந்திய கட்டடக் கலைஞர் கழகம் ( Indian Institute of Architects ) என்பது இந்தியாவின் கட்டடக் கலைஞர்களின் தேசிய அமைப்பாகும். இது 1,24,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கழகம் 1917 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் பம்பாயை தலைமையாக கொண்டு நிறுவப்பட்டது. இது சர்வதேச கட்டடக் கலைஞர்கள் சங்கம் (யுஐஏ) காமன்வெல்த் கட்டடக் கலைஞர்கள் சங்கம் (சிஏஏ), கட்டடக் கலைஞர்களின் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (எஸ்ஏஏஆர்சிஎச்) ஆகியவற்றுடன் தொடர்புடையது. [1]

வரலாறு[தொகு]

இக்கழகம் 1917 மே 12 அன்று பம்பாயில் கட்டடக்கலை மாணவர் சங்கமாகத் தொடங்கப்பட்டது. இது சர் ஜே ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டின் கட்டடக்கலை முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்துக்கு அப்போதைய பம்பாய் அரசாங்கத்தின் கட்டிடக்கலை ஆலோசகராக இருந்த ஜார்ஜ் விட்டெட் முதல் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டார். 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி, இது 'பாம்பாய் கட்டடக்கலைஞர்கள் சங்கம்' என பெயர் மாற்றபட்டது. இது 1925 ஆம் ஆண்டு பிரித்தானியக் கட்டடக்கலைக்கான அரச சங்கத்துடன் இணைக்கபட்டது. மேலும் இது 1926 செப்டம்பர் இரண்டாம் நாளன்று 'இந்திய கட்டடக் கலைஞர் கழகம்' என்ற புதிய பெயரில் தேசிய அமைப்பாக மாறியது. கட்டடக் கலைஞர்களின் தன்னார்வ அமைப்பாக 1860 இன் சங்கங்கள் பதிவுச் சட்டம் XXI இன் கீழ் இது பதிவு செய்யப்பட்டது. 1972 ஆம் ஆண்டின் கட்டடக் கலைஞர்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கட்டடக்கலை கவுன்சில் மட்டுமே தேசிய அளவில் உள்ள மற்றொரு அமைப்பாகும். [2]

இந்நிறுவனத்தின் வடக்குப் பிரிவு 1956 இல் தொடங்கப்பட்டது. இன்று இது பல மாநிலங்களில் பிரிவுகளையும், அந்த மாநிலங்களுக்குள்ளேயே முக்கிய நகரங்களில் மையங்களையும் கொண்டுள்ளது [3]

கண்ணோட்டம்[தொகு]

இக்கழகம் நான்கு பகுதிகளாக தொழில்முறை தேர்வை நடத்துகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் தகுதி பெறும் மாணவர்களுக்கு இணை உறுப்பினர் தகுதி வழங்கப்படுகிறது. இது கட்டடக் கலைஞராக பணியாற்றுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தகுதியாகும். இதில் கட்டடக்கலை, நகர திட்டமிடல் மற்றும் மனித குடியிருப்பு மேம்பாடு ஆகியவற்றில் படிப்புகளை வழங்குகிறது. [4] இந்திய கட்டடக் கலைஞர் கழகத்தில் சேர மூன்று வகையான உறுப்பினர் பதவிகள் உள்ளன 1. ஃபெலோ (எந்தவொரு நபரும் துணைச் சட்டம் 4 (a) இன் கீழ் தகுதி பெற்றவராக இருப்பின் ஃபெலோ ஆக இயலும்) 2. அசோசியேட் (எந்தவொரு நபரும் துணைச் சட்டம் 4 (b) இன் கீழ் தகுதி பெற்றவராக இருப்பின் அசோசியேட் ஆக முடியும்) 3. டைரக்ட் ஃபெலோ தோழர். தகுதி பெற்ற எந்தவொரு நபரும் இந்திய கட்டிடக் கலைஞர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். [5]

பிரிவுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Indian Institute of Architects : IIA பரணிடப்பட்டது 2017-12-07 at the வந்தவழி இயந்திரம் World Design Directory.
  2. About us - History
  3. Chapters
  4. "Education Plus Kerala". 2005-04-12 இம் மூலத்தில் இருந்து 2006-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060720183220/http://www.hindu.com/edu/2005/04/12/stories/2005041200150300.htm. 
  5. "Best Architect in Delhi NCR – Architects in delhi – Architects in Noida –". Kreation Architects (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.

வெளி இணைப்புகள்[தொகு]