தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம், தஞ்சாவூர்
முந்தைய பெயர்கள் | இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் நிறுவனம் |
|---|---|
| வகை | இந்திய முக்கியத்துவ நிறுவனங்கள் |
| உருவாக்கம் | 1967 |
| உருவாக்குனர் | வி. சுப்பிரமணியன் |
| நிதிநிலை | ₹98.88 கோடி (ஐஅ$12 மில்லியன்) (2025 – 26)[1] |
| தலைவர் | ஆர். எசு. சோதி |
| பணிப்பாளர் | வி. பழனிமுத்து |
கல்வி பணியாளர் | 40[2] |
| மாணவர்கள் | 291[3] |
| பட்ட மாணவர்கள் | 213[3] |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 78[3] |
| 44[3] | |
| அமைவிடம் | , இந்தியா 26°51′44″N 75°48′56″E / 26.8622°N 75.8156°E |
| இணையதளம் | niftem-t |
தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம், தஞ்சாவூர் (National Institute of Food Technology, Entrepreneurship and Management, Thanjavur)(முன்னர்: இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பக் கழகம்) என்று அழைக்கப்பட்டது இந்திய அரசின் உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின்[4] கீழ் இயங்கும் ஒரு தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ளது.[5] இந்நிறுவனம் உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பத் துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை வழங்கி வருகிறது.[6]
இந்நிறுவனத்தில் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற உணவுத் தரப் பரிசோதனை ஆய்வகம் உள்ளது. இது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பரிசோதனை ஆய்வகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[7] நாட்டில் சிறந்த உணவு அறிவியல் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
தஞ்சாவூரில் உள்ள இதன் முதன்மை வளாகத்தில் உணவுப் பொருள் மேம்பாட்டு ஆய்வகம், உணவு நுண்ணுயிரியல் ஆய்வகம், அறுவடைக்குப் பிந்தைய பூச்சி மேலாண்மை ஆய்வகம், உணவுப் பதப்படுத்தல் அடைகாப்பகம், மத்திய உபகரணங்கள் ஆய்வகம் மற்றும் உணவுப் பொறியியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்நிறுவனம் அசாமின் குவகாத்தி பஞ்சாபின் பட்டிண்டா ஆகிய இடங்களில் தொடர்பு அலுவலகங்களை நடத்தி வருகிறது. இந்த அலுவலகங்கள் விவசாய விளைபொருட்களின் மதிப்புக்கூட்டல் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பத் துறையில் விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அடைகாத்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான வசதிகளைக் கொண்டுள்ளன.[8][9]
துறைகள்
[தொகு]இக்கழகம் ஆறு துறைகள் கொண்டுள்ளது.[10]
- உணவு உற்பத்தி மேம்பாட்டுத் துறை
- உணவு தரம் மற்றும் சோதனை துறை
- உணவு நுண்ணுயிரியல் துறை
- உணவு பொறியியல் துறை.
- கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை
- விதை பரவும் தொழில்நுட்பத் துறை
ஆய்வுக் கூடங்கள்
[தொகு]உணவு பதனிடும் ஆய்வு மாணவர்களுக்கு பயன் தரக் கூடிய ஆய்வகங்கள்:
- உணவு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்
- உணவு நுண்ணுயிரியல் ஆய்வகம்
- உணவு தர மேம்பாடு ஆய்வகம்
- உணவு சேமிப்பு மற்றும் பொதி கட்டுதல் ஆய்வகம்
- உணவு பதனிடும் மற்றும் குஞ்சுபொரிப்பு ஆய்வகம்
- படிம மேம்பாட்டு ஆய்வகம்
- மென் எக்ஸ்-ரே ஆய்வகம் (Soft X-ray Laboratory)
- ஓசை ஆய்வியல் மற்றும் ஒலியலை எதிர்வு ஆய்வகம்
- நவீன அடுமனை ஆய்வகம்
- உணவு பதனிடும் முறை கற்றல் ஆய்வகம்
படிப்புகள்
[தொகு]உணவு பதனிடும் பொறியியல் துறையில் நான்காண்டு இளநிலை படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை படிப்புகளும் மற்றும் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. இக்கழகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றது.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், இத்தொழில்நுட்ப கழகத்தின் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் உலகத் தரம் வாய்ந்த உணவு பதனிதல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்பங்களை பரிமாற கொள்ளப்படுகிறது.[11][12]
தரவரிசைகள்
[தொகு]தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் 2022ஆம் ஆண்டு தரவரிசையில், பொறியியல் நிறுவனங்களில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம், தஞ்சாவூர் 86-வது இடத்தைப் பிடித்தது.[13]
மத்திய கல்வியமைச்சகத்தின் கண்டுபிடிப்புப் பிரிவால் நடத்தப்பட்ட 'புதுமை சாதனைகளுக்கான நிறுவனங்களின் அடல் தரவரிசை 2021', தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரிவில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம், தஞ்சாவூர், நிறுவனத்திற்கு 'சிறந்த பிரிவு' அங்கீகாரத்தை வழங்கியது.[14]
உணவுப் பதப்படுத்துதல் மூலம் கிராமப்புற வருமானத்தைப் பெருக்கியதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் பங்களிப்பிற்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெற்கு மண்டலத்தால் 'உத்கிரிஷ்ட சன்ஸ்தான் விsuவகர்மா விருது 2019' வழங்கி கௌரவிக்கப்பட்ட ஆறு நிறுவனங்களில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை (தஞ்சாவூர்) நிறுவனமும் ஒன்றாகும்.[15][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DEMAND NO. 45, Demands for Grants, 2025-2026, MINISTRY OF FOOD PROCESSING INDUSTRIES" (PDF). IndiaBudget.gov.in. புது தில்லி. 1 Feb 2025. p. 5. Retrieved 1 Feb 2025.
- ↑ "NIRF 2021 Report" (PDF). Retrieved 2021-04-09.
- 1 2 3 4 "NIRF 2020" (PDF). Retrieved 2021-04-09.
- ↑ "IIFPT" (PDF). Retrieved 2021-04-07.
- ↑ "Directory of Institutions, AISHE". Retrieved 2021-04-05.
- ↑ "Directory of Accredited Testing Laboratories, NABL" (PDF). Retrieved 2021-04-07.
- ↑ "Food safety and standards authority of India referral laboratories lists" (PDF). Retrieved 2021-04-07.
- ↑ "Ministry of Food Processing Industries, Government of India". Retrieved 2021-04-06.
- ↑ "Ministry of Food Processing Industries, Government of India". Retrieved 2021-04-05.
- ↑ "Academic Prospectus". Website. IICPT,dsfsfsfefsfsfsfsefsfsfsfsfsfs Thanjavur. Retrieved 2 October 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Collaborations". Website. IICPT, Thanjavur. Archived from the original on 16 நவம்பர் 2012. Retrieved 2 October 2012.
- ↑ "Ministry of food processing forges bilateral co-operation ties with developed nations". ToI Website. Times of India. Retrieved 2 October 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ National Institutional Ranking Framework 2022 (Engineering)". National Institutional Ranking Framework. Ministry of Education. 15 July 2022.
- ↑ "Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) 2021 Report". Archived from the original on 29 December 2021. Retrieved 2021-12-30.
- ↑ "AICTE - USVA 2019" (PDF). Retrieved 2021-04-20.
- ↑ "Press information bureau News". Retrieved 2021-04-20.