இந்திய இராணுவ அமைப்புகளின் காவல் படை
இராணுவ அமைப்புகளின் காவல் படை Defence Security Corps Defence Security Corps | |
---|---|
செயற் காலம் | 25 பிப்ரவரி1947 – தற்போது வரை |
நாடு | இந்தியா |
கிளை | இந்தியத் தரைப்படை |
பொறுப்பு | இந்திய இராணுவ பாதுகாப்பு நிறுவனங்களை காவல் செய்வது |
அளவு | 30,000 முதல் 40,000 வரை[1] |
ரெஜிமெண்டல் தலைமையகம் | கண்ணூர், கேரளம் |
குறிக்கோள்(கள்) | "Raksha Tatha Surkasha" |
ஆண்டு விழாக்கள் | 25 பிப்ரவரி |
இராணுவ அமைப்புகளின் காவல் படை (Defence Security Corps (சுருக்கமாக:DSC), இந்தியத் தரைப்படையின் கீழ் இயங்கும் இக்காவல் சேவைப் படையினர், தரைப்படை, வான்படை மற்றும் கடற்படை தரைப்படை, வான்படை மற்றும் கடற்படையின் நிறுவனங்களை காவல் செய்வதே இப்படையின் சேவையாகும்.[2] இது இந்தியத் தரைப்படையின் 6வது பெரிய படையாகும்.[3]தற்போது இக்காவல் படைகள் தரைப்படை மற்றும் வான்படையின் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை செய்கிறது.[2] மேலும் இக்காவல் படை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் இராணுவப் படைக்கலத் தொழிற்சாலைகளுக்கும் காவல் பணி மேற்கொள்கிறது. இதன் தலைமையகம் கேரளா மாநிலத்தின் கண்ணூர் நகரத்தில் உள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இப்படையானது 25 ஏப்ரல் 1947 அன்று நிறுவப்பட்டது. 1948ஆம் ஆண்டில் இப்படைக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் காவல் படை (Ministry of Defence Security Corps (MDSC) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படை இந்தியத் தரைப்படையின் ஒரு அணியாக செயல்படுகிறது.
சேவைகள்
[தொகு]இக்காவல் படைகள் இந்தியா முழுவதும் உள்ள முப்படைகளின் நிறுவனங்களை இரவு, பகல் பாராது காவல் பணி மேற்கொள்கிறது.[4]ஓய்வு பெற்ற இராணுவத்தினர் மற்றும் பிரதேச பாதுகாப்புப் படையில் பணிபுரிவர்களையும் இக்காவல் படை கொண்டுள்ளது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.livemint.com/Sundayapp/T6OokS2v0xB32qKFL9evdP/Defence-Security-Corps-Indias-overlooked-soldiers.html வார்ப்புரு:Bare URL inline
- ↑ 2.0 2.1 "DSC Role & Organisation, Indian Army website".
- ↑ "DSC History, Indian Army website".
- ↑ "DSC Role & Organisation, Indian Army website".
- ↑ "Defence Service Corps (DSC) Enrolment".[தொடர்பிழந்த இணைப்பு]