உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய ஆர்கானிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய ஆர்கானிக்
சான்றளிக்கும் நிறுவனம்வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்
நடைமுறைக்கு வந்த நாள்2002
வகைஇயற்கை முறை உணவு

இந்திய ஆர்கானிக் (India Organic) என்பது, இந்தியாவில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஒரு சான்றிதழ் முத்திரையாகும்.[1] 2000-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'இயற்கை விளைபொருட்களுக்கான தேசிய தரநிலைகளை'[2] ஓர் இயற்கை உணவுப் பொருள் பூர்த்தி செய்கிறது என்பதை இந்தச் சான்றிதழின் முத்திரை உறுதிப்படுத்துகின்றது.

இத்தரநிலைகள், இப்பொருளோ அல்லது இப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்களோ, இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது செயற்கை ஹார்மோன்கள் எவற்றையும் பயன்படுத்தாமல், இயற்கை வேளாண்மை முறையின் வாயிலாகவே பயிரிடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்கின்றன. இந்திய அரசின் 'தேசிய இயற்கை உற்பத்தித் திட்டத்தின்'[3][4] கீழ், 'வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால்' [5] அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்கள் வாயிலாகவே இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இத்தரநிலைகள் 2000-ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்து வந்தபோதிலும், இச்சான்றிதழ் வழங்கும் திட்டமும், இதன் விளைவாக இச்சான்றிதழ் முத்திரையும் 2002-ஆம் ஆண்டில்தான் பயன்பாட்டிற்கு வந்தன.[3]

ஜெய்விக் பாரத்

[தொகு]

பொருட்கள் சைவமா அல்லது அசைவமா என்பதைக் குறிக்க இவற்றின் மீது பச்சை மற்றும் சிவப்புப் புள்ளிகள் பயன்படுத்தப்படுவது போலவே, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், வாடிக்கையாளர்கள் உண்மையான இயற்கை உணவை அடையாளம் காண உதவும் வகையில், 2017 ஆம் ஆண்டு, திசெம்பர் மாதத்தில் ஜெய்விக் பாரத் சின்னத்தை அறிமுகப்படுத்தியது.[6]

உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் ஈட்டும் சிறு இயற்கை உற்பத்தியாளர்கள், 2020 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வரை சான்றிதழ் இல்லாமல் தங்கள் விளைபொருட்களை நேரடியாக இறுதி நுகர்வோருக்கு விற்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவர்கள் தங்கள் தயாரிப்புகளில் 'ஜெய்விக் பாரத் சின்னத்தை' பயன்படுத்த முடியாது.[7] இந்தியாவில் இயற்கை உணவை மேலும் நம்பகமானதாகவும், எளிதில் அடையாளம் காணக்கூடியதாகவும் மாற்றுவதற்காக, ஜெய்விக் பாரத் சின்னம் மற்றும் சான்றிதழ் செயல்முறையை ஊக்குவிக்குமாறு அமைப்புகள் அரசை வலியுறுத்தி வருகின்றன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Spices Board of India. 'Organic certification mark'. பரணிடப்பட்டது ஆகத்து 2, 2012 at the வந்தவழி இயந்திரம்
  2. APEDA. 'National Standards for Organic Products.'
  3. 1 2 "Ecoworld. Organic Farming in India". Archived from the original on 2012-01-04. Retrieved 2012-01-11.
  4. "Nabard. Paper on organic farming" (PDF). Archived from the original (PDF) on 2011-11-25. Retrieved 2012-01-11.
  5. Agricultural and Processed Food Products Export Development Authority. 'Organic products'.
  6. "Jaivik Bharat: India's Organic Product Consumer Label". 4 August 2019.
  7. "Sell organic produce without certification till 2020, don't use 'Jaivik Bharat logo': FSSAI tells farmers". 20 May 2019.
  8. "Govt should promote use of Jaivik Bharat logo to push organic food industry".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஆர்கானிக்&oldid=4525060" இலிருந்து மீள்விக்கப்பட்டது