இந்திய அறிவியல் நிறுவனத் தமிழ்ப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பேரவை என்பது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்லது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பாகும். கிட்டத்தட்ட 500 முதல் 600 உறுப்பினர்களைக் கொண்டது இவ்வமைப்பு. இது உறுப்பினர்களின் ஒன்றுகூடலுக்கான, கருத்துப் பரிமாற்றத்திற்கான மற்றும் தமிழ்நாடு சார்ந்த விழாக்களைக் கொண்டாடுவதற்கான தளத்தை உருவாக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும்.

மின்னல் இதழ்[தொகு]

மின்னல் என்பது ஆண்டிற்கு இரு முறை தமிழ்ப் பேரவையினால் வெளியிடப்படும் இதழ். இவ்விதழில் பேரவை உறுப்பினர்களின் படைப்புகள் இடம் பெறுகின்றன. இது உறுப்பினர்களின் படைப்பாற்றலையும் மொழி சார்ந்த திறன்களையும் வளர்க்க உதவும்படியாக அமைக்கப் பட்டுள்ளது.