உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய அரசியலில் பெண்களின் பங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசியல் பங்களிப்பு எனும் சொல் மிகப்பரந்த பொருளுடையது. இச்சொல் ஓட்டுரிமையை மட்டும் குறிப்பதன்று. ஆனால் அதேவேளை முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு ஆகிய இன்னும் பலவற்றைக் குறிப்பதாகும். இந்தியாவில் பெண்கள் ஓட்டுப்போடுதல், சிறிய அளவில் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்துதல், அரசியல் கட்சிகள் ஆகியவற்றில் ஆண்களை விட அதிகம் பங்குகொள்கின்றனர். அரசியல் செயல்பாடு என்பது பொதுவாகப் பெண்களின் அரசியல் பங்களிப்புகளில் வலிமையானதாக இருப்பதில்லை.[1] அரசியலில் நிலவும் பாலின சமத்துவமினைக்கு எதிராகவே இந்திய அரசாங்கம் பெண்களுக்கு உள்நாட்டு அரசியலில் இட ஒதுக்கீட்டை வழங்கியது. 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆண்களின் வாக்குப்பதிவு 67.09 % ஆகவும், பெண்கலின் வாக்குப்பதிவு 65.63% ஆகவும் இருந்தது. இந்தியா, நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அடிப்படையில் கீழிருந்து 20 ஆவது தரநிலையில் உள்ளது.[2] இந்தியாவில் பெண்கள் குடியரசுத்தலைவராகவும், இந்தியாவின் பிரதம மந்திரியாகவும், பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இந்திய வாக்காளர்கள் மாநில சட்டமன்றம், தேசிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பெண்களின் அரசியலமைப்பு உரிமை

[தொகு]

இந்தியப் நாடாளுமன்றஅமைப்பால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பானது, தன் குடிமக்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை, பேச்சுரிமை, கழகங்களை உருவாக்குதல், ஓட்டுரிமை ஆகிய உரிமைகளை உறுதிப்படுத்துகிறது.[3] இந்திய அரசியலமைப்பானது பாலினம், வகுப்புப் பாகுபாடுகளைத் தடைசெய்தல், உழைப்புச் சுரண்டல் மற்றும் ஆள்கடத்தல் ஆகியவற்றுக்குத் தடை, பெண்களை இட ஒதுக்கீடு மூலம் தேர்ந்தெடுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பாலினச் சமத்துவமின்மையை ஒழிக்க முயன்றுவருகிறது.

சம ஊதியம், இலவச சட்ட உதவி, மனிதாபிமான அடிப்படையில் வேலை, மகப்பேறுகால நிவாரணங்கள், கல்வி மற்றும் வேலைக்கான உரிமை, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் பாலின, வர்க்க சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகளை இந்திய மத்திய அரசு இயக்கிவருகிறது.[4]

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியா பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை அடையவேண்டும் என்பதை ஆதரித்து இந்தியச் சுதந்திரப் போராட்டாத்தில் பெண்கள் கணிசமான அளவில் பங்களித்தனர். சுதந்திரமானது இந்திய அரசியல் அமைப்பின் மூலமாக பாலினச் சமத்துவமின்மையைக் கொண்டுவந்தது. ஆயினும் வரலாற்றின் அடிப்படையில் இந்திய அரசியலில் பெண்களின் பங்கானது மிகவும் குறைவாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PDownload Mp3olitical empowerment of women". Archived from the original on 2014-12-19. பார்க்கப்பட்ட நாள் 2018-10-14.
  2. 2.0 2.1 Praveen, Rai (14 January 2011). "Electoral Participation of Women in India: Key Determinants and Barriers". Economic and Political Weekly XVLI (3): 47–55. 
  3. Government of India. "The Constitution of India". Ministry of Law and Justice. Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. Constitution of India. "Directive Principles of State Policy". Government of India. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.