இந்திய அரசியலமைப்பின் தொண்ணூற்று மூன்றாவது திருத்தம்
| இந்திய அரசியலமைப்பின் தொண்ணூற்று மூன்றாவது திருத்தம் | |
|---|---|
| இந்திய அரசியலமைப்பை மேலும் திருத்துவதற்கான ஒரு சட்டம். | |
| சான்று | 93th Amendment |
| நிலப்பரப்பு எல்லை | இந்தியா |
| சம்மதிக்கப்பட்ட தேதி | 20 சனவரி 2006 |
இந்திய அரசியலமைப்பின் தொண்ணூற்று மூன்றாவது திருத்தம் (Ninety-third Amendment of the Constitution of India) என்பது அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்பு (தொண்ணூற்று மூன்றாவது திருத்தம்) சட்டம், 2005 என அழைக்கப்படுகிறது.
இது அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு (27%) வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செயல்படுத்தியது.
இந்தச் சட்டத்தின் விளைவாக, இந்திய அரசியலமைப்பின் 15வது சரத்தில் பிரிவு (5) சேர்க்கப்பட்டுள்ளது.
இது தனியார் சுயநிதி நிறுவனங்கள் உட்பட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பாக, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய குடிமக்களின் எந்தவொரு வகுப்பினரின் முன்னேற்றத்திற்காகவும், அதிகாரப்பூர்வமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அழைக்கப்படுபவர்கள். அத்துடன் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காகவும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது.[1]
இந்தச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், 20 சனவரி 2006 முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நாடாளுமன்றம் மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம், 2006-ஐ நிறைவேற்றியது.[2]. இது 2006 ஆம் ஆண்டு இந்திய இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
இந்திய உச்ச நீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. 2008 ஏப்ரல் 10 அன்று, அசோகா குமார் தாக்கூர் எதிர் இந்திய யூனியன் வழக்கில்,
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ,
- இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ,
- தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ,
- இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ,
- இந்திய அறிவியல் நிறுவனம்
மற்றும் பிற மத்திய கல்வி நிறுவனங்களில்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 93வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம், 2006-ஐ உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.[2] for the provision of 27% quota for candidates belonging to the Other Backward Classes in AIIMS|All India Institute of Medical Sciences (AIIMS), Indian Institutes of Technology (IITs),National Institutes of Technology (NITs), Indian Institutes of Management (IIMs), Indian Institute of Science (IISc) and other central educational institutions.[3][4][5][6][7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ninety-third Constitution Amendment in India" (PDF). சூலை 2009.
- 1 2 "The Central Educational Institutions(CEIs) (Reservation in Admission) Act, 2006" (PDF). indiacode.nic.in. Retrieved 20 January 2023.
- ↑ Mahapatra, Dhananjay (11 April 2008). "SC allows 27% quota for OBCs". The Times of India இம் மூலத்தில் இருந்து 12 April 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080412004605/http://timesofindia.indiatimes.com/India/SC_allows_27_quota_for_OBCs/articleshow/2942977.cms.
- ↑ "SC okays 27% quota for OBCs in higher studies- Politics/Nation-News-The Economic Times". The Times of India. 11 April 2008. http://economictimes.indiatimes.com/articleshow/2942622.cms.
- ↑ "NDTV.com: SC upholds 27 per cent OBC quota in educational institutions". Archived from the original on 11 April 2008.
- ↑ "Breaking News Online: Breaking News! Supreme Court upholds OBC Quota in Educational Institutions". Breaking News Online. Archived from the original on 14 April 2008.
- ↑ "Supreme Court upholds Governments OBC quota in higher educational institutions". Archived from the original on 13 April 2008. Retrieved 12 April 2008.
- ↑ "Supreme Court upholds law for 27% OBC quota". தி இந்து (Chennai, India). 11 April 2008 இம் மூலத்தில் இருந்து 14 April 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080414204404/http://www.hindu.com/2008/04/11/stories/2008041161220100.htm.
- ↑ "Supreme Court upholds Government's OBC quota in higher educational institutions | Latest News". Archived from the original on 26 May 2010. Retrieved 27 August 2021.