இந்திய அரசின் இடைக்கால நிதியறிக்கை 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசின் இடைக்கால நிதியறிக்கை 2019' அல்லது இந்திய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் 2019, (Interim Budget 2019) இந்திய அரசை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசின் நிதி அமைச்சர் பியுஷ் கோயல் 1 பிப்ரவரி 2019 அன்று காலை, மக்களவையில் இடைக்கால நிதியறிக்கையைத் தாக்கல் செய்தார். இடைக்கால நிதியறிக்கையின் விவரங்கள்:[1][2] [3]

  • இரண்டு ஹெக்டேர் அளவு வரை வேளாண் நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய், மூன்று தவணைகளாக நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி வேளாண் குடும்பங்கள் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கு 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
  • மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு புதிதாக மீன்வள அமைச்சகம் அமைக்கப்படும்.
  • 60 வயதிற்கு மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3,000 ஆக உயரத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 100 செலுத்த வேண்டும். [4] இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காமதேனு என்ற சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையாக ரூபாய் பத்து இலட்சத்திலிருந்து 20 இலட்சமாக உயரத்தப்பட்டுள்ள்து.
  • தனி நபர் வருமான வரி:
    • மாத ஊதியம் பெறுபவர்களின் மொத்த வருமானத்திலிருந்து நிரந்தரக் கழிவு (Standard Deduction) ரூபாய் 40,000 இருந்து 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • வருமான வரிக்கழிவுக்கான வருமானம் 3.5 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக்கப்பட்டு, வரிக் கழிவு (Tax Rebate) ரூபாய் 2,500 இருந்து 12,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • அஞ்சலகம், கூட்டுறவு நிறுவனம் மற்றும் வங்கிகளில் நிரந்தர வைப்பு/தொடர் வைப்பு நிதிகளுக்கான வட்டிக்கு, வருமான வரி பிடித்தத்தற்கான (TDS) விலக்கின் உச்சவரம்பு 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.[5]
    • வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு அளிக்கப்படும். வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூபாய் 1.80 இலட்சத்திலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • வருமான வரி செலுத்துவோருக்கு 24 மணிநேரத்தில் கணக்கு ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக பிடித்தம் செய்த வரித் தொகை திருப்பிச் செலுத்தப்படும்.[6]
  • 2016 பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலம் 1.03 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளி வந்துள்ளது. 50 ஆயிரம் கோடி கணக்கில் வராத சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன மற்றும் ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ. 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது
  • உலகில் மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. நிதிபற்றாக்குறை 3 புள்ளி 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 2 புள்ளி 5 சதவீதமாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வரும் அதேநேரத்தில் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மத்திய அரசின் பங்களிப்பு 32 -லிருந்து 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 2016 பினாமி சொத்துத் திருத்த சட்டத்தின்[7][8] மூலம் ரியல் எஸ்டேட் துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட்டு உள்ளது என்றும் கிராமப்புற சுகாதாரம் 98 சதவீதம் என்ற அளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். நாடுமுழுவதும் உள்ள 5.4 இலட்சம் கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறை முடிவுக்கு வந்துள்ளதாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், தேவைப்பட்டால் கூடுதல் நிதி இந்த திட்டத்திற்கு அதிகரித்து வழங்கப்படும்.
  • பிரதமரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்காக[11] 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பயிர்க்கடன் வழங்க இலக்கு 11. 68 லட்சம் கோடியாக உயரத்தப்பட்டுள்ளது. தேசிய கோகுல் இயக்கத்திற்கான [12]ஒதுக்கீடு 750 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. பசுக்கள் பாதுகாப்புக்காகவும், பசுக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தவும் இராஷ்டிரிய காமதேனு ஆயோக் நிறுவனம் அமைக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு 2 முதல் 5 சதவீதம் வட்டி சலுகையும், கடன்களை உரிய நேரத்தில் செலுத்துபவர்களுக்கு மேலும் மூன்று சதவீதம் வட்டி சலுகை அளிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • உஜ்வாலா திட்டத்தின்கீழ் 6 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.[13]
  • கௌசல் விகாஸ் திட்டத்தின்கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. [14]
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் 15 புள்ளி 56 கோடி பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில். 70 சதவீத பயனாளிகள் பெண்கள் ஆவார்.
  • உதான் திட்டத்தின் மூலம் சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது என்றும், நாளொன்றுக்கு 27 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும்,முதல் முறையாக உள்நாட்டு நீர்வழித் தடத்தில் சரக்குப் பெட்டகம் கையாளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
  • சூரிய மின்சக்தி உற்பத்தி கடந்த 5 ஆண்டில் 10 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், இரயில்வே மூலதனச் செலவு, 1.58 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும் இதில் ரயில்வே துறைக்கான மத்திய அரசின் உதவி 64,587 கோடி ரூபாயாக இருக்கும். வடகிழக்கு மாநிலங்கள் உரிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறும் என்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒதுக்கீடு 58,166 கோடியாக அதிகரிக்கப்படும். மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும்.
  • சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், இந்திய விடுதலைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் என்றும் இதனால் நடுத்தர மக்களின் வரிச்சுமை ஆண்டுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுமை குறையும். சரக்கு மற்றும் சேவை வரியால் தேசியக் கட்டமைப்பு மேம்பட்டுள்ளதுடன் வரி வருவாய் அதிகரித்து உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் சாராசரியாக மாதத்துக்கு 97 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி 5 சதவீதமாக இருக்கும். ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபின் ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை என்ற நிலை நனவாகியுள்ளது.

இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விமர்சனங்கள்[தொகு]

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை, வரும் ஏப்ரல் 2019 மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டே தயாரிக்கப்பட்ட தந்திரமான தேர்தல் அறிக்கை என்றும், நிலமற்ற வேளாண் கூலித் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு இந்நிதிநிலை அறிக்கையில் ஏதும் கூறப்படவில்லை என்றும் எதிரிகட்சித் தலைவர்கள் கருத்துக்கள் கூறுகின்றனர். [15] [16]

மேற்கோள்கள்[தொகு]

  1. பட்ஜெட் 2019: நிதியமைச்சர் பியூஷ் கோயல் உரையின் முக்கிய அம்சங்கள்
  2. Union Budget 2019
  3. Winners and Losers: Interim budget 2019
  4. Pradhan Mantri Shram Yogi Mandhan: Unorganised sector workers to get Rs 3,000 post-retirement
  5. Section 194A – TDS on Interest other than Interest on Securities
  6. Highlights of Interim Budget 2019
  7. Benami Transactions (Prohibition) Amended Act, 2016
  8. Binamai Propery Act Analysis
  9. PRADHAN MANTRI GRAM SADAK YOJANA
  10. மோதியின் ஆயுஷ்மான் பாரத் திட்டம்
  11. Prathan Manthri kirishi sinchayee Yojana
  12. Rashtriya Gokul Mission
  13. Prathan Manthri Ujjwala Yojana
  14. பிரதம மந்திரியின் கௌசல் விகாஸ் திட்டம்
  15. இது பட்ஜெட் அல்ல; பாஜக-வின் தந்திரமான தேர்தல் அறிக்கை: மு.க. ஸ்டாலின் கருத்து
  16. பட்ஜெட் பற்றி எதிர்கட்சித் தலைவர்களின் கருத்துகள்

வெளி இணைப்புகள்[தொகு]