இந்திய-ஆரியப் புலப்பெயர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய-ஆரியப் புலப்பெயர்வு, பற்றிய கருத்து இந்திய-ஐரோப்பியத்தின் தாயகத்தை இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியில் காணும் எல்லா இந்திய-ஐரோப்பியத் தோற்ற மாதிரிகளினதும் விளைவாகும்.


இந்திய-ஆரியம் இதற்கு முந்திய தொல்-இந்திய-ஈரானிய நிலையில் இருந்து உருவானது. இந்நிலை வழக்கமாக, கஸ்பியன் கடற் பகுதியில், வெங்கலக் கால அன்ட்ரோனோவோ பண்பாட்டுடன் அடையாளம் காணப்படுகிறது. அத்துடன், இந்திய-ஆரியர்களின் இந்தியாவுக்கு உள்ளான புலப்பெயர்வு நடு அல்லது பிந்திய வெங்கலக் காலத்தில் இடம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இது பிந்திய ஹரப்பாக் கால கட்டத்துடன் பொருந்தி வருவதாகும்.


மாறாக, இந்திய-ஆரியப் புலப்பெயர்வை, இந்தியாவிலிருந்து வெளி நோக்கிக் காணும், இந்தியத் துணைக்கண்டத்தை இந்திய-ஆரியர்களின் தாயகமாகக் கொள்ளும், கொள்கைகளுக்கு அறிஞர் சமூகத்தில் மிகக் குறைவான ஆதரவே காணப்படுகிறது. .[1][2]


மொழியியல்[தொகு]

ஒரு மொழிக் குடும்பத்தின் மூல இடம், அம் மொழிக்குடும்பம் சார்ந்த பல்வகைமை அதிகமான அளவில் காணப்படும் இடமாகும் என்கிறது மொழியியல் புவியீர்ப்பு மையக் கொள்கை.[3] எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய மொழிகளில் ஒன்றான ஆங்கிலம் வட அமெரிக்காவில் அதிக அளவில் அங்கு பேசப்படுவதனால், வட அமெரிக்காவே ஜெர்மானிய மொழிகளை அதிக அளவின் பேசும் இடமாக உள்ளது. ஆனால் அங்கு ஆங்கிலம் மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் இம் மொழிக் குடும்பம் தோன்றியதாகக் கருதப்படும் வடக்கு ஐரோப்பாவில், ஆங்கிலம் மட்டுமன்றி, ஜெர்மன், டச்சு/பிளெமியம். சுவீடியம்/டேனியம்/நார்வீஜியம் ஆகிய மொழிகளும் பெருமளவில் பேசப்படுகிறது.

இந்த அடிப்படையில், இந்திய-ஆரியம் என்னும் ஒரே கிளை மொழிக் குடும்பத்தையே கொண்டுள்ள இந்தியா, இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் தாயகமாக இருக்க முடியாது. ஆனால், மைய-கிழக்கு ஐரோப்பா இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பக் கிளைக் குடும்பங்களான இத்தாலிய, வெனெட்டிய, இல்லிரிய, ஜெர்மானிய, பால்ட்டிய, ஸ்லாவிய, திரேசிய குடும்ப மொழிகளின் தாயகமாக உள்ளது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. (Bryant 2001, ப. 201) "all scholars, whatever position they might hold on the ultimate homeland of the Indo-Europeans, accept that the Indo-Aryans, at least, entered India from the West"
  2. (Mallory 1989) "the great majority of scholars insist that the Indo-Aryans were intrusive into northwest India"
  3. (Sapir 1949, ப. 455)
    Latham, as cited in (Mallory 1989, ப. 152)
  4. (Mallory 1989, ப. 152–153)