உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியா 2020 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா 2020
நூல் பெயர்:இந்தியா 2020
ஆசிரியர்(கள்):ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், ய.சு.ராஜன் வகை = இந்தியா
துறை:தொலைநோக்கு
இடம்:சென்னை 600 098
மொழி:தமிழ்
பக்கங்கள்:456
பதிப்பகர்:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
பதிப்பு:ஆறாம் பதிப்பு 2002
ஆக்க அனுமதி:ஆசிரியர்கள்

இந்தியா 2020, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன் எழுதிய, நெல்லை சு. முத்து தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கினை முன்வைத்துள்ள நூலாகும்.[1] இந்நூல் மாணவர் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.[2]

அமைப்பு

[தொகு]

இந்நூல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முடியுமா? தொழில்நுட்பத் தொலைநோக்கு 2020 பரிணாம வளர்ச்சி, வருங்காலத்திற்கான தயாரிப்பு நுட்பம், அனைவர்க்கும் உடல்நலப் பராமரிப்பு, உறுதுணை நல்கும் உள்கட்டமைப்பு என்ற தலைப்புகள் உள்ளிட்ட 12 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ள நூலாகும். நூலின் இறுதியில் பிற்சேர்க்கை, மேற்கோள்களும் மேற்கொண்டு படிக்க வேண்டியனவும், தமிழ்க்கலைச் சொற்கள் ஆகியன தரப்பட்டுள்ளன.

உசாத்துணை

[தொகு]

'இந்தியா 2020', நூல், (2002; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2020இல் இந்தியா வல்லரசு கலாம் கண்ட கனவு". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-09-20.
  2. நூல் உலகம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியா_2020_(நூல்)&oldid=3723102" இலிருந்து மீள்விக்கப்பட்டது