இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை
இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை | |
---|---|
![]() | |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | மோரே, மணிப்பூர், இந்தியா |
முடிவு: | மே சோட், தக் மாகாணம், தாய்லாந்து |
இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை (India–Myanmar–Thailand Trilateral Highway (சுருக்கமாக:IMT Highway),[1] இவ்வழித்தடம் இந்தியாவின் கீழ்த்திசை கவனக் குவிப்புக் கொள்கையின்படி நிறுவப்பட்டது. இது இம்பால்-மோரே வரையான தேசிய நெடுஞ்சாலை எண் 102 உடன் இணைக்கப்படுகிறது.
4 வழித்தடங்கள் கொண்ட இந்நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 1360 கிலோ மீட்டர் (850 மைல்கள் ஆகும். சூலை 2023ல் இந்நெடுஞ்சாலையின் 70% பணி முடிந்துள்ளது.[2]மியான்மிரில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரண்மாக 30% சாலைப் பணிகள் முடியவில்லை[3].இந்நெடுஞ்சாலையின் பணி முடிவடைந்தவுடன் ஆசியான்-இந்தியா இடையே சுதந்திர வர்த்தக பகுதியாக மாறும்.[4]
வழித்தடங்கள்
[தொகு]இந்நெடுஞ்சாலை வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் மோரேயில் தொடங்கி மியான்மரின் மண்டலை மற்றும் தலைநகரம் நைப்பியிதோ மற்றும் மியாவதி நகரங்கள் வழியாக தாய்லாந்து நாட்டின் தக் மாகாணத்தின் மேற்கில் உள்ள மே சோட் நகரத்துடன் இணைக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All you want to know about Delhi to Bangkok Road Trip - Myths & Reality". Tripoto. 11 September 2015. Retrieved 20 September 2015.
- ↑ Nearly 70% work of India-Myanmar-Thailand Trilateral Highway complete, says Gadkari
- ↑ India-Myanmar-Thailand highway
- ↑ ASEAN–India Free Trade Area