இந்தியாவில் பேரிடர் மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் பேரிடர் மேலாண்மை என்பது இந்தியாவில் பேரிடர் காலங்களில் நாட்டில் பேரழிவு விளைவுகளை நிர்வகிக்கும் பொறுப்புகளைக் குறிக்கிறது.

திட்டம்[தொகு]

இத்திட்டம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2016 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாள் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

சட்டம்[தொகு]

பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), (டிசம்பர் 23, 2005) எண். 53, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையால் 28, நவம்பர் 2005 லும், கீழவையான மக்களவையால் 12 டிசம்பா் 2005 லும் நிறைவேற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இச்சட்டம் இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, 11 அத்தியாயங்கள் மற்றும் 79 பிரிவுகள் கொண்டதாகும். இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் பொதுவானதாகும். இந்தச் சட்டம் "பேரிடா்களின் திறமையான மேலாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர நிகழ்வுகைளத் தவிா்த்தல் குறித்தும் விளக்குகிறது.[1]

ஆணையுரிமை[தொகு]

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA) என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிறுவனமாகும். இதன் பிரதான நோக்கம் இயற்கை அல்லது மனிதா்களால் உருவாக்கப்பட்ட பேரிடா்களின் போதும், நெருக்கடி காலத்தின் போதும் விரைந்து பணியாற்றத் தேவையான செயல்திறன் மேம்பாடு மற்றும் பேரழிவு மீட்பு பொறுப்புகைளயும் செயல்படுத்துவதாகும். இம்முகமை டிசம்பர் 2005 ல் இந்திய அரசால் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். பிரதம மந்திரி இதன் (NDMA) முழுமையான அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார். இந்நிறுவனம் கொள்கைகளை வடிவமைத்தல், வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வதுடன், மாநில பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் (SDMAs) முழுமையான மற்றும் பகிா்ந்தளிக்கப்பட்ட அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவற்றுடன் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகைளயும் செயல்படுத்துகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]