இந்தியாவில் பழுப்பு நிலக்கரி படிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் பழுப்பு நிலக்காிப் படிவுகள்

இந்தியாவில் முக்கியமான பழுப்பு நிலக்காிப் படிவுகள் தமிழ்நாடு, பாண்டிச்சோி, கட்ச, இராஜஸ்தான, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ளன. மேலே குறிப்பிட்ட தழைவுகளில் தமிழ்நாட்டிலுள்ளது முக்கியமானதாகும். இன்று இதை வெட்டி எடுக்கிறார்கள் இதுவே தென் ஆற்காடு மாவட்டத்தில் நெய்வேலி லிக்னைட் வயல் என்று பெயர் பெற்றுள்ளது. இது கடலூர் துறைமுகத்திலிருந்து 43 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குக் கனமான கடலூர் மணற்பாறைகளிலும் மையோசின் (டெர்ஷியாி காலம்) காலத்தைச் சேர்ந்த களிமண்களாலும் ஆன மேல் சுமையினடியில் உள்ளது. இதன் வட, வடமேற்கு எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. தெறிகிலும், தென்கிழக்கிலும் இதன் எல்லையைப்பற்றி இப்போது சோதனைகள் செய்து வருகிறார்கள். இது வரை கடந்துள்ள ஆய்வுகளின் பயனாக வாணிகத்தரமான லிக்னைட் படுகைகள் கடலூர்- விருத்தாச்சலம் சாலைக்கும் தெற்கிலும் சுடத் தலைத்துள்ளதாகத் தொிகிறது. மேற்குறிப்பிட்ட சாலைக்கு வடக்கே அமைந்துள்ள முக்கிய லிக்னைட் வயலில் 12 முதல் 24 மீட்டர் கனமான சீரான படுகையாக லிக்னைட் உள்ளது. இது நிலப்பரப்பில் வெளியே தொிவதில்லை. இந்தப்படுகை துருவத்துளைகளில் மட்டுமே தொிய வந்துள்ளது. எங்குமே இது தரைமட்டத்திலிருந்து 40 மீட்டர் ஆழத்துக்குள் கிடைப்பதில்லை. இன்று லிக்னைட்டை இயந்திரங்களின் உதவி கொண்டு வெட்டி எடுக்கும் முக்கிய சுரங்கக் குழியில் லிக்னைட் 65 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இப் படுகை இப்பகுதியின் வடக்கு-வடமேற்கு எல்லைகளில் மெலிகிறது. இங்கு இதன் கனம் 3 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை உள்ளது. (ஒரு துருவத் துளையில் 24 மீட்டர் உள்ளது) விருத்தாசலம் சாலைக்குத் தெற்கே அண்மையில் கடந்த துருவததுளை வேளைகள் 85 மீ்ட்டர் முதல் 100 மீட்டர் ஆழத்துக்குள் 16 மீட்டர் கனமான லிக்னைட் படிவு ஒன்று இருப்பதைக் காட்டியுள்ளன. இந்த வயல் சுமார் 256 ச.கி.மீ. பரப்பு வரை நிரூபிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு இருப்புகள் 2000 மில்லியன் டன் அளவு இருக்கும். ஆனால், முக்கியப் பகுதியில் லிக்னைட் படுகையானது ஆர்டீசியன் நிலலயிலுள்ள நீர்நிறை படுகைகளுக்கு இடையே உள்ளதால் இதை வெட்டி எடுப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. இந்த நீரழுத்தப் பிரச்சனையை இப்போது ஒருவாறு சமாளித்துச் சுரங்க வேலைகளை திறந்த வெட்டு முறையில் நடத்துகிறார்கள். வெட்டி எடுத்துப் போடும் போது இதன் உயரம் முதல் 60 சத விகிதம் வரை உள்ளது. இதன் கெலோாி அளவு அல்லது அனலூட்டும் திறன் அதிகமாக உள்ளது. தரத்தில் உயர்ந்த இந்த லிக்னைட்டை அச்சிலிட்டு செய்கட்டி (BRIQVETTES) களாகச் செய்ய வேண்டும். மேலும் இந்த லிக்னைட்டைப் புகையற்ற உயர்ந்த கிளர்வுடைய காி, தார். மோட்டார் ஸ்பிாிட் போன்ற துணை விளைபொருள்களைப் பயக்குமாறு காிமவயப்படுத்தலாம். தாரைப் பதப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் தயாாிப்பிற்கு ஏற்ற 'பீனால்கள்'(Phenols) போன்ற மற்றப் பயனுள்ள பொருள்களைப் பெறலாம். லிக்னைட்டை வாயு மயமாக்குவதன் (gasification) மூலம் அம்மோனியம் சல்பேட் யூாியா பாேன்ற உரங்களைத் தயாாிக்கலாம். தென் ஆற்காடு லிக்னைட், மின் காப்பீடுகள், அச்சுமைகள், பெயிண்டுகள், வார்னிஷ்கள் போன்ற பல தொழில்களில் பயன்படுத்தக்கூடிய 'மோண்டன் மெழுகினையும்' (Montan Was) சிறிதளவு கொண்டுள்ளது. எல்லாவற்றையும் விட இந்த லிக்னைட், இரும்புத்தாதுக்களைத் தீயகம் நீக்கும் முறையில் குறைத்து இரும்பு தயாாிக்க ஏற்றவாறு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதைப் பயன்படுத்திச் சேலத்து மேக்னடைட் தாதுக்களிலிருந்து இரும்பை உருக்கி எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இராஜஸ்தானில், பிக்கானேருக்கு கி.மீ. தென்மேற்கேயுள்ள பலானாவில் மிக முக்கியப் படிவுகள் உள்ளன. இந்த லிக்னைட் நெய்வேலி லிக்னைட்டைப்போல் அல்லாது இறுக்கப்பட்ட சக்கை நிலக்காியைப் (PEAT) போன்று வெளிர்பழுப்பு அல்லது கருப்பு நிறமாக